வீட்டில் ஃபேன் துடைப்பது சிரமமாக இருக்கும் போது, பழைய பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் சில உபகரணங்களை பயன்படுத்தி, விரைவாக தூசியை சுத்தம் செய்யும் எளிய வழி.
பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் (½ லிட்டர் அல்லது 1 லிட்டர்), கத்தி அல்லது பேப்பர் கட்டர், 2 காய்ந்த மைக்ரோஃபைபர் துணிகள், மாப் ஸ்டிக்.
பாட்டில் முன்புறம் மற்றும் பின்னில் 15 செ.மீ நீளம், 5 செ.மீ அகலம் அளவில் வெட்டுதல். இதை ஃபேன் இறக்கைகளுக்கு பொருந்தும் அளவிற்கு மாற்றலாம்.
பாட்டிலின் மையத்தில் சிறிய துளை செய்து, வெட்டிய பக்கங்களில் காய்ந்த மைக்ரோஃபைபர் துணிகளை நன்றாக செருகுதல்.
மாப் ஸ்டிக்கின் மேல் பகுதியை பாட்டிலின் துளையில் நன்றாகச் சொருகி ஃபேன் கிளீனர் தயாரித்தல்.
கிளீனரை ஃபேன் இறக்கைகளில் மாட்டி மெதுவாக முன்னும் பின்னும் இழுத்து தூசியை ஒரே நேரத்தில் சுத்தம் செய்தல்.
ஃபேனுக்குக் கீழே பேப்பர் அல்லது துணி வைத்தல். முதலில் காய்ந்த துணியால் தூசியை துடைத்துப் பிறகு ஈரமான துணியால் மீண்டும் துடைக்க வேண்டும்.
கிளீனிங் முடிந்த பின் பாட்டிலும் துணிகளும் தனியாக எடுத்துத் தூசியை தட்டி, மீண்டும் பாதுகாப்பாக வைத்திருத்தல்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்