சிக்கனம், திட்டமிடல்... பணத்தை சேமிக்கும் கலை இதுதான்!

மனித வாழ்வில் பணம் முக்கியமானது

சிலர் அதிகம் ஆசைபடுகிறார்கள்; சிலர் திருப்தியுடன் வாழ்கிறார்கள். செலவில் சிக்கனமும், வீண்செலவும் இருக்கலாம் – இரண்டும் தவிர்க்கப்பட வேண்டும்.

நியாயமான தேவைகளை பூர்த்தி செய்தல், தான தர்மங்களில் ஈடுபடுதல் அவசியம். உடல்நலம் நல்லபோது, சொத்துக்களை வாரிசுகள் பயனடைய உயரில் எழுதி வைக்க வேண்டும்.

சொத்துகளை உரிய திட்டமிடலுடன் ஒழுங்குபடுத்தாமல் விட்டால், இறந்தபின் வாரிசுகளுக்குள் பிளவு ஏற்படலாம்.

வாழும் காலத்தில் தேவைக்கு ஏற்ப செலவுசெய்து, உபயோகமாக வாரிசுகளுக்குப் பயன்படும் வகையில் உயில் அல்லது திட்டம் செய்ய வேண்டும்.

பணம் இருந்தால் உறவுகள் நெருங்கும்; ஆனால் மரணத்தின் பின்னர் நினைவுகூறாதவர்களாக மாறக் கூடும்

அதனால் வாழ்க்கையை சிந்தனையோடு நடத்த வேண்டும்.

பணம் சம்பாதித்து வீணாகச் செலவு செய்து, முதுமையில் பிறரையே சாரும் நிலையை தவிர்க்க வேண்டும்.

சிக்கனமாக வாழ்வது நல்லது, ஆனால் அதில் கருமித்தனமும், வீண்செலவிலும் அகப்படக் கூடாது.

திட்டமிடாத வாழ்க்கை சிக்கல்களை ஏற்படுத்தும்; பணப்பேராசையில் தானதர்மங்களைத் தவிர்ப்பதும் தவறு.

வாழும் போதே சேமித்து, மனைவி, பிள்ளைகள் பயன்பெறும் வகையில் சரியான திட்டமிடல் அவசியம்.

மேலும் அறிய