எல்பிஜி சிலிண்டர் மானியம் (சுமார் ₹300 வரை) பெற, உங்கள் எல்பிஜி இணைப்பை ஆதார் மற்றும் வங்கிக் கணக்குடன் இணைத்திருக்க வேண்டும்.
சிலிண்டர் முழு விலை செலுத்தப்பட்ட பிறகு, மானியத் தொகை நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
மத்திய அரசு வழங்கும் பல திட்டங்களைப் பெற, ஆதார் எண்ணை வங்கி மற்றும் எல்பிஜி இணைப்புடன் கட்டாயம் இணைக்க வேண்டும்.
1. ஆன்லைன்: எல்பிஜி இணையதளத்தில் 'லிங்க் ஆதார்' விருப்பம் மூலம். 2. ஆஃப்லைன்: போர்ம் 2 பூர்த்தி செய்து ஏஜென்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும். 3. கால்சென்டர்: 1800-2333-555 என்ற இலவச எண்ணுக்கு அழைத்து IVR வழியில் இணைக்கவும்.
இணையதளத்தில் நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் எண் உள்ளிட்ட பிறகு ஓ டி பி மூலம் சரிபார்ப்பு செய்யப்படுகிறது.
போரம் 2-ஐ பதிவிறக்கம் செய்து, ஆதார் நகலுடன் ஏஜென்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.
பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து இலவச எண்ணிற்கு அழைத்து, எல்பிஜி ஐடி மற்றும் ஆதார் எண் பதிவு செய்யலாம்.
சிலிண்டர் புக்கிங் தேதியிலிருந்து 2-7 நாட்கள் காத்திருக்கவும். வங்கி கணக்கு செயலில் உள்ளதா என சரிபார்க்கவும். சப்சிடி ஸ்டேட்டஸ் ஆன்லைனில் சரிபார்க்கவும்
உங்கள் எல்பிஜி நிறுவனத்தின் டோல்-பிரீ எண்ணிற்கு அழைக்கலாம். அல்லது நேரடியாக ஏஜென்சி அலுவலகத்தில் சென்று விவரங்களைச் சரிபார்க்கலாம்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்