சுங்க சாவடியில் இத்தனை இலவச சேவை... மறக்கமால் நோட் பண்ணுங்க!

சாலை வசதி ஒரு அடிப்படை உரிமை. 1990களுக்குப் பிறகு சாலைகள் வருமான மூலமாக மாறின.

தற்போது, நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது, இதில் நடுத்தர வருத்தினரிடமிருந்து ஆண்டுக்கு பில்லியன் டாலர் வரை பெறப்படுகிறது.

டோல்கேட்டில் வசூலிக்கப்படும் பணம் வாகனப் பயணத்திற்கே அல்ல

சாலை பராமரிப்பு மற்றும் அவசர சேவைகள் உள்ளிட்ட வசதிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இது பலருக்குத் தெரியாத ஒரு உண்மை.

வாகனத்தில் செல்லும் போது மருத்துவ உதவி தேவைப்பட்டால்...

...இரசீதின் பின்புறம் செல்போன் எண் பதிவாகியிருக்கும். அதற்கு போன் செய்யவும். உடனடியாக ஆம்புலன்ஸ் பத்து நிமிடத்தில் வரும்.

வண்டி பழுதாகி நின்றாலோ....

...அல்லது பஞ்சர் ஆகி விட்டாலும் அதற்கு இன்னொரு எண் இருக்கும். அதற்கு போன் செய்தால் பத்து நிமிடத்தில் அங்கு வந்து சரிசெய்து விடுவார்கள்.

பெட்ரோல் அல்லது டீசல் இல்லாமல் வண்டி நின்றால்...

...டோல் ஹெல்ப்லைனுக்கு அழைத்தால் 5–10 லிட்டர் எரிபொருள் கொண்டு வருவார்கள், ஆனால் அதன் கட்டணம் நாமே செலுத்த வேண்டும்.

மேற்கண்ட தடங்கலுக்கும் சேர்த்துத் தான் நம்மிடம் இருந்து சுங்கக் கட்டணம் வசூல் செய்கிறார்கள்

இவ்வாறு சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் போது நாம் தெரிந்துகொண்ட செய்திகளை பலருக்கும் தெரிவிப்பதன் மூலம் அனைவரும் பயனடையலாம்.

இதற்கிடையே , தனியார் கார் வேன் / ஜீப்களுக்கு வருடாந்திர பயண அட்டை வசதி நேற்று முதல் அமலுக்கு வந்தது

3,000 ரூபாய் செலுத்தி இந்த வருடாந்திர பயண அட்டையை பெறும் தனியார் கார் / வேன் / ஜீப் உரிமையாளர்கள், ஒரு வருடத்திற்கோ அல்லது 200 முறையோ கட்டணம் இன்றி, தேசிய நெடுஞ்சாலை மற்றும் தேசிய விரைவுச் சாலை கட்டண மையங்களை கடப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் அறிய