நீங்கள் நின்ற நிலையில் கீழே குனிந்து கால்களைத் தொட முடியவில்லை என்றால், அது ஒரு நெருக்கடி நிலை என்பதை அறியுங்கள்.
அலைபாயும் கூட்டத்தில் நேராகவோ, எதிராகவோ செல்லாமல், கூட்டத்தை மையமாக வைத்து மூலைவிட்டமாக நகரவும்.
கைகளைக் குருத்சி போல் நெஞ்சுக்கு முன்னால் வைத்து பாதுகாக்கும் நிலையை ஏற்கவும். இது மூச்சுத் திணறலிலிருந்து பாதுகாக்கும்.
ஏற்கனவே வெளியேறும் வழிகள், கதவுகள், இரண்டு கட்டடங்களுக்கு இடையிலான இடங்கள் ஆகியவற்றை மனக்கணக்காக தெரிந்துகொள்ளவும்.
முன்னால் கூட்டம் நிறைந்திருந்தால், மக்கள் குறைவாக உள்ள பாதையைத் தேர்வு செய்து அந்த திசையில் நகரவும்.
உங்களை முடக்கக் கூடிய தூண், சுவர் போன்றவை அருகில் இருந்தால் அவற்றை விட்டு விலகி இருப்பது நல்லது.
தலை உள்ளே, கை கால்கள் சுருண்டு பிசிறி சிசு நிலைபோல் படுத்துக்கொள்ளவும். இது தலை, நெஞ்சு பகுதிகளை பாதுகாக்கும்.
மூச்சு விட முடியாமல் அல்லது நாடி துடிப்பு இல்லாமல் 10 விநாடிகளுக்கு மேல் இருந்தால், உடனடியாக சிபிஆர் முதலுதவி செய்யப்பட வேண்டும்.
கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் செல்லவே கூடாது. செல்வதெனில் பாதுகாப்புடன் செல்ல வேண்டும்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்