புருவங்களை விரிய வைக்கும் அழகு... நன்னீர் மீன்களில் இம்புட்டு வகை இருக்கு!

கப்பி (Guppy)

சிறிய அளவு, வண்ணமயமான வால் மற்றும் அமைதியான இயல்பு கொண்ட கப்பி மீன்கள் தொடக்கநிலை மீன்வளர்ப்போரின் முதல் தேர்வாகும். 22–28°C வரை நீரில் நன்றாக வாழும் இவை குழுவாக வளர்த்தால் சிறப்பாக இருக்கும்.

பெட்டா மீன் (Betta Fish / Siamese Fighting Fish)

நீண்ட வால் மற்றும் அழகான நிறங்கள் கொண்ட பெட்டா மீன்கள் தனித்துவமானவை. 25–28°C வரை சூடான நீர் விரும்பும் இவை, ஆண் மீன்கள் சண்டையிடக்கூடியதால் தனியாக வைத்தல் சிறந்தது.

நியான் டெட்ரா (Neon Tetra)

சிறிய அளவிலும், சிவப்பு–நீல நிற வண்ணம் கொண்ட இவை குழுவாக நீந்தும் அழகான மீன்கள். 22–26°C வரை வெப்பமான நீரில் நன்றாக வளர்கின்றன. அமைதியான இவை மற்ற சிறிய மீன்களுடன் வாழ சிறந்தவை.

ப்ளூ & கோல்ட் குராமி (Blue and Gold Gourami)

தென் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இவை நிறமிகு, அமைதியான மீன்கள். 5–6 அங்குலம் வரை வளரக்கூடிய இவை தாவரங்கள் நிறைந்த மெதுவாக நகரும் நீரில் நன்றாக வாழும். காற்றை நேரடியாக சுவாசிக்கும் திறனும் உண்டு.

பிக்மி கொரிடோரஸ் கேட்ஃபிஷ் (Pygmy Corydoras Catfish)

தொட்டியின் அடிப்பகுதியில் வாழும் இவை மீதமுள்ள உணவுகளைத் தின்று தொட்டியை சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றன. அமைதியான, குழுவாக வாழும் இவை மற்ற சிறிய மீன்களுடன் நன்றாக பொருந்தும்.

ஜீப்ரா டேனியோ (Zebra Danio)

ஜீப்ரா போல கோடுகள் கொண்ட இவை அதிவேகமாக நீந்தும் ஆர்வமிகு மீன்கள். 18–26°C வரை வெப்பநிலையில் நன்றாக வளர்கின்றன; கடினமான சூழல்களையும் தாங்கும் தன்மை கொண்டவை.

மாலி (Molly)

வண்ணம், வால் வடிவம், நட்பு இயல்பு ஆகியவற்றால் பிரபலமான மீன்கள். இனிய நீர் மற்றும் சிறிதளவு உப்புநீரிலும் வாழ முடியும். 24–28°C வரை வெப்பமான நீர் விரும்பும் இவை சிறிய குளங்களில் கூட வளர்க்கலாம்.

பிளாட்டி (Platy)

சிறிய அளவு, பிரகாசமான நிறம், அமைதியான இயல்பு கொண்ட பிளாட்டிகள் தொடக்கநிலை மீன்வளர்ப்போருக்கு சிறந்தவை. பல்வேறு நீர்நிலைகளில் தழுவிக்கொள்ளும் திறனுடன், மற்ற மீன்களுடன் அமைதியாக வாழ்கின்றன.

தொடக்கநிலை மீன்வளர்ப்போருக்கு சிறந்த தேர்வு

இம்மீன்கள் அனைத்தும் பராமரிக்க எளிதானவை, அழகான தோற்றம் கொண்டவை, மேலும் சமூக தொட்டிகளில் இணக்கமாக வாழும் தன்மை கொண்டவை. சிறிய முயற்சியுடன் வீட்டில் அழகான, ஆரோக்கியமான அக்வேரியம் அமைக்கலாம்.