மழைக்காலத்தில் தெருவோர உணவகங்களில் சுத்தமற்ற நீர் மற்றும் பாத்திரங்களில் தயாரிக்கப்பட்ட சமோசா, பஜ்ஜி, வடை போன்ற உணவுகள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை.
மழை நீர் பாதிப்பால் பச்சை கீரை, முட்டைகோஸ், காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளில் கிருமிகள் அதிகரிக்கும். உப்பு கலந்த வெந்நீரில் கழுவி வேகவைத்து சாப்பிடுவது நல்லது.
கேரட், வெள்ளரிக்காய் போன்ற சாலட் வகைகள் விரைவில் கெட்டுப்போகும் காரணத்தால், மழைக்காலத்தில் அவற்றை சாப்பிடுவது சரியல்ல.
தெருவோரில் வெட்டி விற்கப்படும் பழங்கள் மற்றும் பழச்சாறுகள் தூசி, ஈக்கள் போன்றவை அடையும் வாய்ப்பு உள்ளதால் அவற்றை தவிர்க்க வேண்டும்.
மழைக்காலத்தில் கடல் நீர் நச்சுத்தன்மை அதிகரிக்கும் காரணத்தால் மீன், கடல் உணவுகளை தவிர்ப்பது பாதுகாப்பானது.
பால், தயிர், மோர் போன்றவை மழைக்காலத்தில் விரைவில் கெட்டுப்போகும். புதிய பால் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மழைக்காலத்தில் உணவுகளை சுத்தமாக தயாரித்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு முக்கியம்.
மேலே கூறிய உணவுகளை மழைக்காலங்களில் கவனமாக அல்லது தவிர்த்து சாப்பிடுவது வயிற்று பிரச்சனைகளைத் தடுக்கும்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்