உலகிலே மிக நீளமான ரயில்... 8 எஞ்சின், 682 பெட்டி இருக்கு!
‘ருத்ராஸ்திரா’ என்பது இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில் ஆகும்.
4.5 கி.மீ நீளமும், 354 வேகன்களும், 7 என்ஜின்களும் கொண்ட இந்த ரயில், கஞ்ச்க்வாஜாவிலிருந்து கர்வா சாலை வரை 200 கி.மீ தூரத்தை 5 மணி நேரத்தில் பயணிக்கிறது.
உலகின் மிக நீளமான ரயில் ஆஸ்திரேலியாவின் BHP இரும்புத் தாது சரக்கு ரயிலாகும். இது 7.3 கி.மீ நீளமுடையதாகவும், 682 பெட்டிகள் கொண்டதாகவும் உள்ளது.
இதன் நீளம் 22 ஈபிள் டவர்களுக்கு சமமானது, மற்றும் இவ்வளவு பெரிய ரயிலைக் இழுக்க ஒன்றிலோ இரண்டிலோ இல்லாமல் பல என்ஜின்கள் தேவைப்படுகிறது.
BHP இரும்புத் தாது ரயில் உலகின் மிக நீளமானதும், மிக கனமானதும் ஆகும்.
8 என்ஜின்கள், 5,648 சக்கரங்கள் கொண்ட இந்த ரயிலின் எடை 1,00,000 டன்கள் மேற்பட்டதாகும், மற்றும் இது கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்த ரயிலின் கட்டுப்பாட்டு அமைப்பு அதிநவீனமானது. முன் எஞ்சினில் அமர்ந்திருக்கும் லோகோ பைலட்டால், மற்ற ஏழு எஞ்சின்களையும் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்த முடியும்.
இந்த எஞ்சின்கள் ரயிலின் நீளத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.