தொப்புளில் இந்த எண்ணெய்... இம்புட்டு நன்மை இருக்கு!
Author - Mona Pachake
Author - Mona Pachake
ஆமணக்கு எண்ணெயை தொப்புளில் தடவுவதால் செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, செரிமானம் சீராக நடைபெறும். இதனால், வீக்கம் மற்றும் அஜீரண பிரச்சனைகள் தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஆமணக்கு எண்ணெயை தொப்புளில் தடவுவது, வயிற்று தசைகளை தளர்த்த உதவுகிறது. இதன் மூலம், மாதவிடாய் பிடிப்புகள் மற்றும் வலிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ஆமணக்கு எண்ணெய் உடல் சூட்டை தணிக்கும் என்றும், தொப்புளில் தடவுவதால் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும் என்றும் கூறப்படுகிறது.
தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் தடவுவதால், சருமம் வறட்சி நீங்கி, ஈரப்பதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆமணக்கு எண்ணெய் வலி நிவாரணியாகவும் செயல்படும் என்று நம்பப்படுகிறது.
தொப்புளில் எண்ணெய் தடவுவது ஒரு ஆயுர்வேத நடைமுறை என்றும், இது பல நன்மைகளைத் தரும் என்றும் கருதப்படுகிறது.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்