பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை விரதம் உடல் நலத்தை மேம்படுத்தும்.
இரவு உணவை 7 மணிக்குள் முடித்து, உணவுக்குப் பிறகு ஒரு மணி நேரம் கழித்து உறங்க வேண்டும்.
மதுவை முற்றிலும் தவிர்ப்பது இரத்த சுத்தத்துக்கு அவசியம்.
தினமும் போதுமான தண்ணீர் குடிப்பது இரத்த ஓட்டத்தை சரிசெய்கிறது.
உப்பின் அளவை குறைத்துக் கொள்வது இரத்த சுத்தி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும்.
தினமும் நான்கு பச்சை வேப்ப இலைகளை வெறும் வயிற்றில் ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
மாதம் ஐந்து முறை, பத்து வேப்ப இலைகளை தண்ணீரில் ஊறவைத்து, காலை வெறும் வயிற்றில் குடிப்பது இரத்த சுத்திக்கு உதவும்.
செம்பருத்தி பூ டீ பாலிபினால்கள் மற்றும் ஆக்சிஜனேற்றிகளை கொண்டதால் இரத்தத்தை சுத்தம் செய்யும்.
கேரட், பீட்ரூட், சுரைக்காய் போன்ற காய்கறிகளை தினசரி உணவில் சேர்க்க வேண்டும்.
மாதுளை, மாம்பழம், நாவற்பழம், நெல்லிக்காய், ஆப்பிள் போன்ற பழங்களை உணவில் சேர்த்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்