காய்கறிகள் எப்போதுமே அதிக சத்துகளை கொண்டிருப்பவை.இவற்றில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி, ஈ மற்றும் மெக்னீசியம் நிறைந்திருக்கின்றன.
அசைவம் சாப்பிடுபவர்கள் உணவில் அதிகம் மீன் சேர்த்து வரலாம். உடல் ஆற்றலாக செயல்பட கொழுப்பு அமிலங்கள் தேவை. அவை மீன் உணவில் நிறைந்திருக்கிறது. கொழுப்பு அமிலம் குறைவால் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உணவில் மீனை அதிகம் சேர்த்துவரலாம்.
இனிப்பு நிறைந்த சாக்லெட்டுகளை எல்லா வயதினரும் விரும்புவார்கள். சற்றே கசப்பும் மிதமான இனிப்புச்சுவையும் கொண்ட டார்க் சாக்லெட்டுகள் உடலுக்கு நிச்சயம் பலனளிக்க கூடியவை. டார்க் சாக்லெட்ட்ல் இருக்கும் எபிகேட்டச்சின் என்னு ஆன்டி ஆக்ஸிடண்ட் மூளை செல்களைப் பாதுகாக்கிறது. மேலும் இதிலிருக்கும் ஃப்ளாவனோல்ஸ் நினைவுத்திறனை அதிகரிக்கிறது.
அற்புதமான மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது என்பதைஆய்வுகளும் நிரூபித்திருக்கின்றன. இதில் வைட்டமின் சி, இ, கே, ஃபோலேட், சல்ஃபோரஃபேன் போன்ற சத்துகளும் அடங்கியுள்ளன.இதில் இருக்கும் வைட்டமின் கே மூளைக்கு வலுவூட்டுவதோடு மூளைத்திறனை மேம்படுத்துகிறது.
போஸ்டன் பல்கலைக்கழகம்நடத்திய ஆய்வு ஒன்றில் தினமும் 10 ஆண்டுகளாக முட்டை சாப்பிடும் 1400 பேரின் ஆரோக் கியத்தைக் கண்டறிந்தது. இந்த பெரியவர்களின் நினைவுத்திறன் சிறப்பாக இருந்ததும் கண்டறியப்பட்டது.
மூளை சிறப்பாக இயங்க தேவையான அறிவு ஆற்றலை ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் தருகின்றன. குறைந்த அளவு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை கொண்டிருப்பவர்களின் மூளை மந்தமாக செயல்படுவதாக நியூயார்க் டைம்ஸ் ஜர்னல் நியூராலஜி தெரிவித்துள்ளது
ஊட்டசத்துகள் அதிகம் நிறைந்திருக்கும் பழம் இது. வைட்டமின் பி 6 மற்றும் ஃபோலிக் ஆசிட் நிறைந்திருக்கிறது. மூளை யில் இரத்த உறைவைத் தடுக்க உதவுகிறது. வயதான பிறகுபக்கவாத பிரச்சனைகள் வராமல் உங்களை பாதுகாக்கிறது.
உலர் பருப்புகளில் ஒன்றான பாதாம் மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. இதில் சால்மன் மீன்களை போலவே ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் மூளையைப் பாதுகாக்கும் வைட்டமின் ஈ-யும் நிறைந்திருக்கின்றன. அதனால் தினமும் ஒரு கைப்பிடி அல்லது 10 பாதாம் கொட்டைகளையாவது எடுத்துகொள்ளுங்கள்.
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்