தொண்டையில் கரகரப்பு? மா இலையை சுட்டு தேனில் வதக்கி!

மா இலை & தேன்

மா இலையை சுட்டு, தேனில் வதக்கி சாப்பிட தொண்டைக் கரகரப்பு மற்றும் கட்டு நீங்கும்.

இஞ்சி, துளசி, தேன் கலவை

இஞ்சி சாறு, துளசி சாறு மற்றும் தேனை சம அளவில் கலந்து குடித்தால் சளி, இருமல், கபம் குணமாகும்.

பனங்கற்கண்டு கலவை

பனங்கற்கண்டு பொடி, அதிமதுரப் பொடி, தேனை சூடான பாலில் கலந்து குடித்தால் தொண்டைக்கு நிவாரணம் தரும்.

நெல்லிக்காய் & தேன்

நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் தொடரும் விக்கல் நீங்கும்.

இஞ்சி, துளசி, லவங்கப்பட்டை கசாயம்

இஞ்சியுடன் துளசி, லவங்கப்பட்டை சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க தொண்டை கரகரப்பு குறையும்.

உப்பு நீர் கொப்பளை

வெந்நீரில் உப்பை கரைத்து வாய் கொப்பளித்தால் தொண்டைக் கட்டும், தொண்டைப் புண்களும் குணமாகும்.

மூலிகை பொடி & தேன்

சுக்கு, மிளகு, திப்பிலி பொடியை தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை பிரச்னைகள் குணமாகும்.

வெங்காயம் & தேன் கலவை

வெங்காயத் துண்டுகளுடன் தேன் ஊற்றி நன்கு ஊறவைத்து சாப்பிட தொண்டைப் புண்கள் நிவர்த்தியாகும்.

மேலும் அறிய