முகப் பொலிவுக்கு உதவும் மரத்துப் பிசின்கள்... இப்படி யூஸ் பண்ணுங்க!

வெள்வேலம் பிசின் – உடல் நலத்திற்கும் அழகிற்கும்

வாயில் வைத்து சுவைத்தால் வறட்சி, இருமல், நெஞ்செரிச்சல், தொண்டை அலர்ஜி குணமாகும். நீடித்து எடுத்தால் தாது கட்டும், நுரையீரல் தேறும், அழகு மற்றும் வலிமை தரும்.

கருவேல பிசின் – நரம்புத்தளர்ச்சிக்கு நல்லது

காயவைத்து நெய்யில் பொரித்து தூளாக்கி பாலில் கலந்து குடிக்க முக அழகு கூடும், நரம்புத்தளர்ச்சி குறையும்.

கோங்கு பிசின் – குடல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு

பொடியாக்கி இளநீரில் கலந்து குடித்தால் தந்தி மேகம், பெரும்பாடு, சீத/செரியாக் கழிச்சல் தீரும்.

புரசம் பிசின் – கழிச்சல் மற்றும் ரத்த வாந்திக்கு

கிராம்புடன் சேர்த்து பொடித்து தேனில் கலந்து கொடுத்தால் கழிச்சல், ரத்த வாந்தி போன்றவை குணமாகும்.

பாதாம் பிசின் – நரம்பு உறுதிக்காக

நரம்புகளை உறுதியாக்கும் சிறந்த பிசின் வகையாகும்.

முருங்கை பிசின் – தாது மற்றும் உடல் வலிமைக்கு

நரம்பு உறுதி, தாது பலம் மற்றும் உடல் வலிமை பெற உதவும்.

மாம் பிசின் – கால் வெடிப்புக்கு

மாம் பட்டைச் சாறு அல்லது பிசினை வெடித்த பகுதிகளில் தடவ குணமடையும்.

அரசம்பாலை பிசின் – பாத வெடிப்புகளுக்கு

பாதத்தில் உள்ள புத்த வெடிப்புகளில் தடவுவதால் குணம் காணப்படும்.

வாகைப் பிசின் – பிரமேகம், மேகக் கட்டிக்கு

வறுத்து பொடித்து பாலுடன் எடுத்தால் பிரமேகம், மேகம், கிரந்தி, பேதி ஆகியவை குணமாகும். தாது கட்டும், உடல் பொலிவு பெறும்.

விளாம் பிசின் – சிறுநீரக மற்றும் குடல்நோய்களுக்கு

வெண்ணெயுடன் கலந்து எடுத்தால் நீர் எரிச்சல், மேகநோய், அக உறுப்புப் புண்கள், வெள்ளை, பெரும்பாடு போன்றவை தீரும்.

மேலும் அறிய