தூக்கம் வரவில்லையா….. அப்போ இதை பாருங்க …
இரவு உணவை முன்கூட்டியே செய்ய முயற்சி செய்யுங்கள் மற்றும் இரவில் அதிக உணவை தவிர்க்கவும். அது வயிற்று உபாதையை ஏற்படுத்தும்.
இரவு அதிக தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது அடிக்கடி கழிப்பறைக்கு செல்வதற்கு தூண்டும்.
நல்ல தூக்கத்தை உறுதி செய்வதற்கு படுக்கைக்கு முன் மன அழுத்தத்தைக் குறைப்பது முக்கியம்.
பகல் நேரத்தில் தூக்கத்தை குறைக்கவும்.
இரவில் காபியைத் தவிர்க்கவும், ஏனெனில் இது 10 முதல் 12 மணிநேரம் வரை தூக்கமின்மையை ஏற்படுத்தும்.
கட்டாயமாக 8 மணிநேர தூக்கம் வேண்டும்.
படுக்கைக்கு முன் தொலைக்காட்சியோ அல்லது உங்கள் கையில் இருக்கும் மொபைலயோ பார்ப்பதற்குரிய நேரத்தை குறைக்கவும்.