Advertisment

ஜெர்மன் பல்கலைக் கழகங்களுடன் கைகோர்த்த ஐ.ஐ.டி மெட்ராஸ்; புதிய மாஸ்டர் டிகிரி அறிமுகம்

ஜெர்மன் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 'நீர் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய மாற்றம்' குறித்த புதிய கூட்டு முதுகலை படிப்பை (JMP) தொடங்கிய ஐ.ஐ.டி மெட்ராஸ்; தகுதிகள் இதுதான்!

author-image
WebDesk
New Update
sada

ஜெர்மன் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து புதிய கூட்டு முதுகலை படிப்பை (JMP) தொடங்கிய ஐ.ஐ.டி மெட்ராஸ்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஐ.ஐ.டி மெட்ராஸ் (IIT Madras) இரண்டு ஜெர்மன் பல்கலைக்கழகங்களான RWTH ஆச்சென் மற்றும் TU டிரெஸ்டன் (TUD) மற்றும் AIT, பாங்காக் மற்றும் UNU-FLORES ஆகியவற்றுடன் இணைந்து 'நீர் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய மாற்றம்' குறித்த புதிய கூட்டு முதுகலை படிப்பை (JMP) தொடங்கியுள்ளது. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: IIT Madras launches international master’s programme on Water Security and Global Change

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஐ.ஐ.டி மெட்ராஸின் புதிய படிப்பிற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30 வரை அவகாசம் உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம் — https://abcd-centre.org/master-program/ 

குறிப்பிட்ட பொறியியல் பின்னணியைக் கொண்ட இந்திய மற்றும் சர்வதேச மாணவர்கள் இந்த முதுகலை படிப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். முதல் தொகுதிக்கான வகுப்புகள் ஜூலை 29-ம் தேதி தொடங்கும்.

தகுதிகள்

பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் இளங்கலை அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு படிப்பில் சேர்க்கை வழங்கப்படும்:

- கீழே பட்டியலிடப்பட்டுள்ள கல்விப் பாடங்களில் ஒன்றில் தகுதிப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கட்டிடப் பொறியியல்

இயந்திர பொறியியல்

சுற்று சூழல் பொறியியல்

நீர் அறிவியல் பொறியியல்

நீர் வள பொறியியல்

கணக்கீட்டு பொறியியல்

வேளாண்மை அல்லது நில அமைப்பு பொறியியல்

- தகுதிப் பட்டம் குறைந்தபட்சம் 180 ECTS-புள்ளிகளை உள்ளடக்கியிருக்க வேண்டும் அல்லது AICTE, AIU, ACU, IAU, Zentralstelle für ausländisches Bildungswesen போன்ற நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்:.

- தகுதிப் பட்டத்தின் ஒட்டுமொத்த கிரேடு புள்ளி சராசரியானது 60 சதவீத மொத்த மதிப்பெண்கள் அல்லது "முதல் வகுப்பு"க்குக் குறைவாக இருக்கக்கூடாது.

- ஆங்கிலத்தில் பட்டப்படிப்பை முடிக்காத மாணவர்கள் பின்வரும் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கிலத் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற வேண்டும்.

- IELTS: ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம் 6.5, ஒவ்வொரு கூறுகளிலும் குறைந்தது 6.0

– TOEFL: வாசிப்பில் 21, கேட்பதில் 20, பேசுவதில் 22, எழுதுவதில் 21 என மொத்தம் 88.

கட்டண அமைப்பு

ஐ.ஐ.டி மெட்ராஸில் ஒரு செமஸ்டருக்கு ரூ 36400, TUD இல் ஒரு செமஸ்டருக்கு 287 யூரோக்கள், RWTH இல் ஒரு செமஸ்டருக்கு 335 யூரோக்கள். ஒரு செமஸ்டருக்கு மொத்த கட்டணம் 622 யூரோக்கள் + ரூ 36400.

ஐ.ஐ.டி மெட்ராஸ் கட்டணத்துடன் மருத்துவக் காப்பீடு உள்ளடக்கியது என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும், மாணவர்கள் ஜெர்மனியில் தங்கியிருக்கும் உத்தேச காலத்திற்கு காப்பீடு பெற வேண்டும். இருப்பினும், தங்குமிடம், வாழ்க்கை மற்றும் பயண செலவுகள் கட்டணத்தில் சேர்க்கப்படவில்லை. மாணவர்கள் அதற்கான உதவித்தொகை வாய்ப்புகளைப் பெறலாம்.

நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இன்டர்ன்ஷிப் மற்றும் மாஸ்டர் ஆய்வறிக்கை நடத்தப்படும். இந்த படிப்பு மூன்று பல்கலைக்கழகங்களில் பதிவுசெய்யப்பட்ட மாணவர்களின் இடமாறுதலை செயல்படுத்தும் என்று நிறுவனம் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் ஐ.ஐ.டி மெட்ராஸில் கல்வியாண்டைத் தொடங்குவார்கள் மற்றும் TUD மற்றும் RWTH இல் குறைந்தபட்சம் ஒரு செமஸ்டர் படிப்பார்கள், அவர்கள் விரும்பும் பல்கலைக்கழகத்தில் தங்கள் முதுகலை ஆய்வறிக்கையை செயல்படுத்த நெகிழ்வுத்தன்மை வழங்கப்படும். இந்த படிப்பு மாணவர்களுக்கு பல்வேறு ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை வழங்கும், உலகளாவிய சூழலில் நீர் பாதுகாப்பு சவால்கள் மற்றும் காலநிலை தழுவல் பகுதிகளை எதிர்கொள்ளும் திறன்களை மாணவர்களுக்கு வழங்கும் என்று அதிகாரப்பூர்வ வெளியீடு கூறுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Iit Madras
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment