Advertisment

சிம்புவை தொடர்ந்து அலி ஃபசல்... நீளும் நட்சத்திர பட்டியல் : கமல்ஹாசன் தக் லைஃப் முக்கிய அப்டேட்

மணிரத்னம், கமல்ஹாசன் போன்ற பிரபலங்களுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி

author-image
WebDesk
New Update
Kamal Haasan Fazal

கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் அலி ஃபசல் இணைகிறார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் படத்தில், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு பெயர் பெற்ற நடிகர் அலி ஃபசல் இணைந்துள்ளார். இதன் மூலம் ஃபசல் தனது முதல் தென்னிந்திய படத்தில் நடிக்க உள்ளார்

Advertisment

தி அதர் எண்ட் ஆஃப் தி லைன் என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஃபசல்,  இந்தியில் 3 இடியட்ஸ், ஏக் தோ சான்ஸ், ஃபுக்ரே மற்றும் பாத் பான் கயி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஹாலிவுட் ஹிட் படங்களான ஃபியூரியஸ் 7, டெத் ஆன் த நைல் மற்றும் காந்தஹார் அகிய படங்களிலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள ஃபசல் தற்போது தக் லைஃப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆக உள்ளார்.

இது குறித்து பேசியுள்ள, அலி ஃபசல் இது போன்ற ஒரு மகத்தான படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும், மணிரத்னம், கமல்ஹாசன் போன்ற பிரபலங்களுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி என்றும் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் மணி சாரின் தக் லைஃப் படத்தில், நடிப்பதை நினைத்து உண்மையில் மகிழ்ச்சியடைகிறேன்.

கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றுவதும், அவருடன் இதைப் பற்றிய குறிப்புகளைப் பகிர்வதும் பெருமையாக இருக்கிறது. இந்திய சினிமாவின் இரண்டு முன்னணி கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னை நம்பி இந்த கேரக்டரை கொடுத்த மணி சாருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நினைத்ததை திரையில் கொண்டுவர ஆவலுடன் இருக்கிறேன்என்றும் கூறியுள்ளார்.

சமீபத்தில், ஸ்ருதிஹாசனுடனான ஒரு ஆன்லைன் உரையாடலில், கமல்ஹாசன் இந்த படத்திற்கான ஒரு பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து முடித்துவிட்டதாக ஐந்தே மணி நேரத்தில் இதை முடித்துவிட்டதாக கூறியிருந்த கமல்ஹாசன், பாடலுக்கான வரிகளையும் தானே எழுதியதாக குறிப்பிட்டிருந்தார். அபிராமி, நாசர், த்ரிஷா, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, மற்றும் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள தக் லைஃப் படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்,

இந்த படத்தில் ஆரம்பத்தில் துல்கர் சல்மான் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், அவர் திடீரென விலகியதால், அந்த கேரக்டரில் தற்போது சிம்பு களமிறங்கியுள்ளார். அதேபோல் ஜெயம் ரவியும் படத்தில் இருந்து விலகியுள்ளதால், அவருக்குப் பதிலாக அசோக் செல்வனை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment