Advertisment

தக் லைஃப் படத்தில் சிம்பு... கமல்ஹாசனின் மகன் கேரக்டரா? ஃபர்ஸ்ட் லுக் டீசர் வைரல்

தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்துள்ள நடிகரு சிம்புவின் ஃபர்ஸ் லுக் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Simbu Thug Life

தக் லைஃப் டீசரில் சிம்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் படத்தில் இருந்து துல்கர் சல்மான், ஜெயம் ரவி விலகியதாக கூறப்படும நிலையில், புதிதாக இணைந்துள்ள நடிகர் சிலம்பரசன் தொடர்பான டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

1987-ம் ஆண்டு கமல்ஹாசன் சரண்யா நாசர், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் நாயகன். மணிரத்னம் இயக்கிய இந்த படம் தமிழகத்தில் இருந்து மும்பை சென்று பெரிய கேங்ஸ்டராக இருந்த வரதராஜ முதலியாரின் வாழ்க்கை வரலாறு படம் என்று கூறப்பட்டது. கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் நாயகன் படம் முக்கிய படமாக அமைந்துள்ளது.

நாயகன் பெரிய வெற்றிப்படமாக அமைந்திருந்தாலும், அதன்பிறகு கமல்ஹாசன் மணிரத்னம் இருவரும் இணைந்து எந்த படத்தையும் தொடங்கவில்லை. தற்போது 36 வருடங்களுக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். தக் லைஃப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், கமல்ஹாசனுடன் த்ரிஷா, ஜெயம்ரவி துல்கர் சல்மான், நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில், ஏ.ஆர்,ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு மே 8-ந் தேதி தக் லைஃப் படத்தின் அப்டேட் வெளியாகும் என்று படக்குழு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தக் லைஃப் படத்தில் நடிகர் சிலம்பரசன் இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள படக்குழுவினர், சிம்பு தொடர்பான டீசரையும் வெளியிட்டுள்ளனர். 40 விநாடிகள் கொண்ட இந்த டீசரில் சிம்பு ஒரு ஜீப்பில் பாலைவனத்தில் சிம்பு துப்பாக்கியுடன் என்ட்ரி கொடுக்கிறார். மேலும் இந்த படத்தில் கமல்ஹாசனின் மகனாக சிம்பு நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான பத்து தல படத்தில் சிம்பு கேங்ஸ்டராக நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து தக் லைஃப படத்திலும் சிம்பு கேங்ஸ்டர் கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. துல்கர் சல்மான் இந்த கேரக்டரில் நடிக்க இருந்த நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் விலகியதை தொடர்ந்து அந்த கேரக்டரில் தற்போது சிம்பு நடிக்கிறார். இதற்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்த சிம்பு தற்போது 2-வது முறையாக மணிரத்னத்துடன் இணைந்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Simbu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment