Advertisment

பட்டுக்கோட்டை இறந்த சோகம்... வற்புறுத்திய சந்திரபாபு : கண்ணதாசன் எழுதிய சோக கீதம்!

பட்டுக்கோட்டை இறந்த சோகத்தில் இருந்த கணண்தாசனை சந்திரபாபு வற்புறுத்தியதால் ஒரு ஹிட் பாடல் உருவாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Kannadasan Chandrababu

கண்ணதாசன் - சந்திரபாபு

தமிழ் சினிமாவில் முன்னணி கவிஞராக திகழ்ந்தவர் கண்ணதாசன். மனிதனின் அத்தனை உணர்ச்சிகளுக்கும் தனது வரிகள் மூலம் உயிர்கொடுத்துள்ள கண்ணதாசன், தான் மட்டுமல்லாமல், தனக்கு போட்டியாக வந்த கவிஞர்களுடன் நெருங்கிய நட்புடன் இருந்தவர். அந்த நட்பின் காரணமாக கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் இறந்த்தை தாக்கிக்கொள்ள முடியாமல் அவருக்காக ஒரு பாடல் எழுதி தனது படத்தில் சேர்த்துள்ளார் கண்ணதாசன்.

Advertisment

தமிழ் சினிமாவில் மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். மக்களுக்கு தேவையாக கருத்துக்களை தனது பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய இவர், குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி கவிஞராக உயர்ந்தவர். இவர் சினிமாவில் பாடல் எழுத தொடங்கிய சமயத்தில் தான் கண்ணதாசனும் சினிமாவில் என்டரி ஆகியுள்ளார். ஆனால் அப்போது அவருக்கு வசனம் எழுதவே அதிக வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பாடல் எழுத தொடங்கிய கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்துடன் நெருங்கிய நட்பில் இருந்துள்ளார். தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம், கண்ணதாசன் எழுதும் வகையில் பாடல்கள் இருந்தால் அவரிடம் சொல்லி எழுத சொல்லுங்கள் என்று சொல்லிவிடுவாராம். அதேபோல் கண்ணதாசனும் இதை கடைபிடித்துள்ளார். இருவருக்கும் இடையே இருந்த நட்பு மீறிய உறவு தான் இதற்கு காரணம்.

நன்றாக சென்றுகொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில், புயல் வீசியது போல் பட்டுக்கோட்டை தனது இளம் வயதிலேயே மரணமடைந்தார். அவரது மரணம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்திய நிலையில், கண்ணதாசன் மனதில் ஆறாத தழும்பாக மாறியுள்ளது. இதனால் தனது அனைத்து வேளைகளையும் மறந்து பட்டுக்கோட்டை ஞாபகமாகவே இருந்துள்ளார் கண்ணதாசன். அப்போது தனது சொந்த படமான கவலையில்லா மனிதன் படத்தை இயக்கி வந்தார்.

இந்த படம் தொடர்பான வேலை பாதியில் நின்ற நிலையில், படத்தின் இசையமைப்பாளர் எம்.எஸ்.வி, நாயகன் சந்திரபாபு இருவரும் கண்ணதாசனுக்கு ஆறுதல் கூறி, பட்டுக்கோட்டையை நினைத்து இந்த படத்தில் ஒரு பாடலை எழுதுங்கள். எம்.எஸ்.வி இசையமைப்பாளர் நானே பாடுகிறேன். இந்த பாடலை கேட்ட ஒவ்வொரு மனிதனும் இனி தன் வாழ்வில் அழவே கூடாது என்று சந்திரபாபு சொல்ல, இதை கேட்ட கண்ணதாசன், எழுதிய பாடல் தான், ‘’பிறக்கும்போதும் அழுகின்றாய்’’ என்ற பாடல்.

இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் நினைவை கொண்டு வரும் என்று சொல்லலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News Kannadasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment