Advertisment

விஷால் மீண்டு வந்துவிட்டாரா? ரசிகர்கள் சொல்வது என்ன? ரத்னம் விமர்சனம்

விஷால் பிரியா பவானி சங்கர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ரத்னம் படம் எப்படி இருக்கிறது?

author-image
WebDesk
New Update
radhnam Movie

ரத்னம் படம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஷால் – ஹரி கூட்டணியில் தயாராகியுள்ள 3-வது படமாக ரத்னம் இன்று வெளியாகியுள்ள நிலையில், இந்த படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? படம் எப்படி உள்ளது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisment

தமிரபரணி என்ற பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த நடிகர் விஷால் – இயக்குனர் ஹரி கூட்டணியில் 2-வது வெளியான பூஜை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது 3-வது முறையாக இணைந்துள்ள படம் ரத்னம். பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரத்னம் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படத்தின் விமர்சனம் குறித்து ரசிகர்கள் இணையத்தில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதில் ஹரி எப்போதுமே தனது படங்களில் தனது பெயர் வரும் இடத்தில் கோவில் கோபுரத்தை காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வழக்கம் இந்த படத்திலும் தொடர்கிறது.

புஷ்பா 2 படத்திற்கு இசையமைத்து வரும் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளனர். ஹரியின் ஸ்பீடு இயக்கம் இந்த படத்திலும் தொடர்கிறது. சண்டை காட்சிகள், செண்டிமெண்ட், ஆக்ஷன், காமெடி என அனைத்திலும் படம் சிறப்பாக வந்துள்ளது. விஷாலுக்கு இன்னொரு வெற்றி என்றும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அதே சமயம், படம் ஆவ்ரேஜ் தான். ஹரியின் வழக்கமான படம் தான். அவரது முந்தைய படங்கள் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது. காட்சி அமைப்பில் புதுமை இல்லை. வழக்கத்திற்கு மாறான தனது திரைக்கதையில் சில மாற்றங்களை செய்துள்ள ஹரி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திபடுத்த முயற்சித்து அதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளார் என்று கலவையான விமர்சனங்களையும் கூறி வருகின்றனர். மேலும் இந்த படத்தின் மூலம் பழைய விஷால் மீண்டும் வந்துவிட்டார் என்று கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Actor vishal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment