Advertisment

தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம்... மாப்பிள்ளை யார் தெரியுமா? வைரல் போட்டோஸ்

ஜீ தமிழின் சீதாராமன் சீரியலில் சீதாவின் அக்காவாக நடித்திருந்தார். தற்போது அவரின் காட்சிகள் சீரியலில் அதிகம் இடம்பெறவில்லை.

author-image
WebDesk
New Update
Engagement of Akshitha

நடிகை அக்ஷிதா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மேக்னா கேரக்டரில் நடித்து வந்த நடிகை அக்ஷிதா போபையாவுக்கு இன்று நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அக்ஷிதா. சன்டிவியின் அழகு மற்றும் சுமங்கலி சீரியல்களில் நடித்து பிரபலமான இவர், அடுத்து கண்ணான கண்ணே சீரியலில் நாயகியின் தங்கையாக நடித்து பிரபலமானார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், ஜீ தமிழின் சீதாராமன் சீரியலில் சீதாவின் அக்காவாக நடித்திருந்தார். தற்போது அவரின் காட்சிகள் சீரியலில் அதிகம் இடம்பெறவில்லை. அதனைத் தொடர்ந்து, விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இளம் பிஸினஸ் வுமன் மேக்னா கேரக்டரில் நடித்திருந்தார். இவரின் கேரக்டரில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.

அதே சமயம் சில எபிசோடுகளில் அவரின் கேரக்டரை கொலை செய்துவிட்டனர். இது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுதியது. இதனால் அக்ஷிதா அடுத்து எந்த சீரியலில் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், அக்ஷிதாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அக்ஷிதா தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு வந்த அக்ஷிதா, தற்போது தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். இவரின் வருங்காக கணவர் ப்ரீத்தம் சுரேஷ் பிரபலமான நடிகர் ஆவார். பெங்களூரை சேர்ந்த இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

akshitha bopaiah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment