Advertisment

சரிந்தது சிறகடிக்க ஆசை... பட்டியலுக்கு வந்த ஜீ தமிழ் சீரியல் : இந்த வார டி.ஆர்.பி ரேட்டிங்

தமிழ் சீரியல்களின் இந்த வார டி.ஆர்.பி ரேட்டிங் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Tamil Serial TRP Rating

தமிழ் சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல்கள் ஒரு முக்கியமான பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. இதனை கருத்தில் கொண்டு டிவி சேனல்களும் வாரத்தின் 7 நாட்களிலும் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. ஆனால் இந்த சீரியல்கள் அனைத்தும் டி.ஆர்,பி ரேட்டிங் வைத்தே வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. ஒரு சீரியலை மக்கள் பார்க்கும் அளவை பொருத்து டி.ஆர்,பி ரேட்டிங் கணக்கிடப்படுகிறது.  

Advertisment

அந்த வகையில் சின்னத்திரை சீரியல்களின் இந்த வருடத்தின் 17வது வாரத்திற்கான டி.ஆர்.பி ரேட்டிங் குறித்து இப்போது பார்க்கலாம்.

முதலிடத்தில் சிங்க பெண்ணே 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் கடந்த வாரத்தில் முதல் இடத்தில் இருந்தது. அதேபோல் இந்த வரமும் 9.25 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்க தக்க வைத்துள்ளது.

2-வது இடத்தில் கயல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் 8.61  புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

3-வது இடத்தில் எதிர்நீச்சல்

கடந்த வாரம் 3-வது இடத்தில் இருந்த சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியல் இந்த வாரம் 8.44 புள்ளிகளுடன் 3-வது இடத்தை தக்கவைத்துள்ளது.

4-வது இடத்தில் வானத்தைப்போல 

கடந்த வாரம் 5-வது இடத்தில் இருந்த சன் டிவியின் வானத்தைப்போல சீரியல் இந்த வாரம் 8.05  புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

வது இடத்தில் சிறகடிக்க ஆசை

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக சிறகடிக்க ஆசை கடந்த வாரம் 4-வது இடத்தில் இருந்த நிலையில்இந்த வாரம் 7.44 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

6 வது இடத்தில் சுந்தரி 2

கடந்த வாரம் 7-வது இடத்தில் இருந்த சன் டிவியின் சுந்தரி 2 இந்த வாரம் 6.82 புள்ளிகளுடன் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

7 வது இடத்தில் மல்லி

சன. டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட மல்லி சீரியல், கடந்த வாரம் டி.ஆர்.பி பட்டியலில் இடம் பிடிக்காத நிலையில், இந்த வாரம் 6.36 புள்ளிகளுடன் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

வது இடத்தை பிடித்த பாக்கியலட்சுமி 

கடந்த வாரம் 8-வது இடத்தில் இருந்த விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் 6.27 புள்ளிகள் பெற்று 8 வது இடத்தை தக்க வைத்துள்ளது.

வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல் கடந்த வாரம் 9-வது இடத்தில் இருந்த நிலையில்இந்த வாரமும்இந்த முறை 5.81  புள்ளிகளை பெற்று 9வது இடத்தை பிடித்துள்ளது.

10 வது இடத்தில் கார்த்திகை தீபம்

அவ்வப்போது டாப் 10 ரேட்டிங்கில் எட்டிப்பார்க்கும் ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல்,  இந்த வாரம் 5.47 புள்ளிகளுடன் 10-வது இடத்தை பிடித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment