Advertisment

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன் : குழந்தைகள் உட்பட 31 பேர் படுகாயம் : ஊட்டியில் பதற்றம்

சென்னை பெரம்பூர், கொளத்தூர் பகுதிகளைச்சேர்ந்த நண்பர்கள், அவர்களது குடும்பத்தினர் என 31 பேர் கடந்த 30 ஆம் தேதி கோடை விடுமுறையை கழிப்பதற்காக ஊட்டி சென்றுள்ளனர்.

author-image
WebDesk
New Update
coimbatore 2

கோத்தகிரி சாலையில் 200 அடி பள்ளத்தில் மினி பஸ் கவிழ்ந்து விபத்து - சென்னையைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 32 பேர் படுகாயம். 7 வயது சிறுவன் பலி.

Advertisment

கோவையில் மேட்டுப்பாளையம் -  கோத்தகிரி சாலையில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே ஊட்டி சென்று விட்டு மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த மினி பஸ் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 32 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பெரம்பூர், கொளத்தூர் பகுதிகளைச்சேர்ந்த நண்பர்கள், அவர்களது குடும்பத்தினர் என 31 பேர் கடந்த 30 ஆம் தேதி கோடை விடுமுறையை கழிப்பதற்காக நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மேட்டுப்பாளையம் வந்துள்ளனர். பின்னர் மறுநாள் மேட்டுப்பாளையத்தில் இருந்து மினி பஸ் வாடகைக்கு எடுத்து ஊட்டிக்கு சென்றுள்ளனர். ஊட்டியில் உள்ள சுற்றுலாத்தலங்களை சுற்றிப்பார்த்த பின் இன்று மாலை மீண்டும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்வதற்காக மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்துள்ளனர்.

அப்போது குஞ்சப்பனை அருகே பவானிசாகர் காட்சி முனை பகுதியில் வந்து கொண்டிருந்த போது மினி பேருந்தில் பிரேக் பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. பேருந்தின் டிரைவர் எவ்வளவோ முயன்றும் பிரேக் பிடிக்காத நிலையில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 200"அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணித்த 31 பேரும் மரண பயத்தில் கத்தி கூச்சலிட்டுள்ளனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் இதுகுறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  இச்சம்பவம் குறித்து அறிந்த காவல் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் இடுபட்டுள்ளனர்.

coimbatore 2

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி பேருந்தில் பயணித்து படுகாயமடைந்த டிரைவர் உட்பட 32 பேரை பத்திரமாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் வித்யா(35),மான்வி(7), பிரணவி(3),சரண்யா(33), சாஹல்(6), சுதர்சனா(34),  ஹாசிம்(7), ஸ்ரீதர்(39), ஹனீஸ்(10), அபினேஷ் ஆதித்யா(7), கீர்த்தனா(10), அதிதி(7), உசைனா(34), சுஜாதா(32),கிருத்திகா(7), பிரசாத்(36),சாகுல் ஹமீது(37), மோனிகா(34), ஆசிப்(7), பிரியதர்ஷினி(14), தினேஷ்(38), ஹர்ஷினி(6), லோகேஷ்(40), மதன்குமார்(36), வேதவர்ஷினி(6), ஷாமிலி(28),கிருத்திகா(6) உள்ளிட்ட 32 பேர் படுகாயமடைந்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் ஆறு பேர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்துக்குள்ளான பேருந்தில் 7 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் சிக்கி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.  அவரை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து அறிந்த திமுக தலைமைச்செயற்குழு உறுப்பினர் அஷ்ரப் அலி,மேட்டுப்பாளையம் எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்ததோடு, காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

மினி பஸ் பிரேக் பிடிக்காமல் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சென்னையைச்சேர்ந்த சுற்றுலா பயணிகள் 32 பேர் படுகாயமடைந்து,சிறுவன் பலியான  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu coimbotore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment