Advertisment

ஸ்டெர்லைட் போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழப்பு, விசாரணை கமிஷன் அமைப்பு, 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ieTamil-22-may-01

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசியதால் பதற்றமான சூழல் உருவானது.

Advertisment

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் போராட்டம் 100வது நாளாக இன்று நடைபெற்றது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே 2 ஆயிரத்திற்கும் மேலான மீனவர்கள் இன்று கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதற்கு ஆதரவாக தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 10 ஆயிரம் கடைகளை அடைத்து போராட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100வது நாள் போராட்டமான இன்று பொதுமக்கள் பேரணி சென்றனர். இந்தப் பேரணியின்போது திடீரென கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் சிலர் போலீசார் மீது கற்களை வீசினர். இதனால் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது.

மாலை 06.15 - தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம். போராட்டத்தின்போது லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிடவும், துப்பாக்கிச்சூடு சமப்வம் குறித்து ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் எனவும் தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 5.46: துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை ஒருநாள் கடையடைப்பு - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு.

மாலை 5.32: தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்திரநாதனுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்திப்பு. தூத்துக்குடி கலவரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியானது குறித்து முறையீடு.

மாலை 5.03: புதுச்சேரியில் மாணவர் அமைப்பினர் போராட்டம். இந்திரா காந்தி சிலை அருகே திரண்ட மாணவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், மக்கள் மீதான துப்பாக்கி சூட்டை எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை போலீசார் கைது செய்தனர்.

மாலை 4.33: தூத்துக்குடி கலவரத்தில் இதுவரை மொத்தமாக 10 பேர் பலி. 3 பெண்கள் மற்றும் 7 ஆண்கள் பலி.

மாலை 4.32: திரேஸ்புரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் கூடுதலாக ஒரு பெண் பலி. திரேஸ்புரம் துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை இரண்டு பெண்கள் பலி.

மாலை 4.13: தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீண்டும் துப்பாக்கி சூடு. பெண் ஒருவர் பலி. (போராட்டத்தில் ஈடுபட்டோர் எஸ்.பி. வாகனத்தை முற்றுகையிட்டபோது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.)

மாலை 4.08: துப்பாக்கி குண்டு வாயில் பாய்ந்ததால் பலியான பெண் வெனிஸ்டா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் அவர் 17 வயதான மாணவி என்பதும் தெரியவந்துள்ளது.

மதியம் 3.55: ஸ்டெர்லைட்டிற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது.

மதியம் 3.41: சென்னை கோயம்பேட்டில் ஸ்டெர்லைட் ஆலை மற்றும் கலவரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதியம் 3.38: ஸ்டெர்லைட் ஆலை மற்றும் போராட்டக்காரர்கள் மீது நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் துவங்கியுள்ளது.

மதியம் 3.35: ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இந்த கலவரம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும் பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசு நடவடிக்கை எடுக்கும். போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க நேரிட்டது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு கூடுதலாக காவல்துறையினர் தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டனர் . ஸ்டெர்லைட் ஆலை இயங்காமல் இருக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மதியம் 3.31: தூத்துக்குடி கலவரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.

மதியம் 3.16 : சென்னையில் இருந்து போலிஸ் உயர் அதிகாரிகள் விமானம் மூலம் தூத்துக்குடி விரைந்தனர்.

மதியம் 3.10: துப்பாக்கி சூட்டில் பலியான மேலும் 5 பேரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. மேட்டுபட்டி கிளாஸ்டன், தூத்துக்குடி கந்தைய்யா, குறுக்குசாலை தமிழரசன், ஆசிரியர் காலனி சண்முகம் மற்றும் தூத்துக்குடி மனிராஜு ஆகியோரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.

மதியம் 2.54: தூத்துக்குடி கலவரத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பலி எண்ணிக்கை 6-ஆக உயர்வு.

https://www.facebook.com/IETamil/videos/1721663664579155/

 

மதியம் 2.27: துப்பாக்கி சூட்டில் பலியானோரின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

https://www.facebook.com/IETamil/videos/1721640911248097/

மதியம் 2.07: “தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என டிஜிபி டி.கே ராஜேந்திரன் தகவல்.” என டி.ஜி.பி டி.கே ராஜேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தூத்துக்குடி கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர கூடுதலாக காவலர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மதியம் 2.05: கலவரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பலி எண்ணிக்கை தற்போது 4- ஆக உயர்ந்துள்ளது. மரணமடைந்த 4 பேரில் ஒருவர் பெண்.

மதியம் 1.48: துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு. மேலும் 4 பேர் படுகாயம் என தகவல்.

மதியம் 1.24 : துப்பாக்கி சூட்டில் இறந்த 2 பேரில் ஒருவர் அடையாளம் தெரியவந்துள்ளது. அவர் உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மதியம் 1.15 : தமிழக முதல்வர் பழனிசாமி காவல்துறையினருடன் அவசர ஆலோசனை. தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த அவசர ஆலோசனையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் டிஜிபி பங்கேற்பு.

மதியம் 1.10 : தீ வைக்கப்பட்ட குடியிருப்பு பகுதிக்கு தீயணைப்பு வாகனங்கள் வந்தது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். குடியிருப்பு சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைவரும் பாதுகாப்பு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

மதியம் 12.54 : ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் 6 மாடி குடியிருப்புக்கு தீ வைப்பு என தகவல்.

sterlite quarters burnt down

மதியம் 12.48 : போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் மேலும் ஒருவர் பலி. முன்னதாக ஒருவர் பலியான நிலையில் தற்போது மேலும் ஒருவர் பலியாகினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

May 2018

மதியம் 12.44 : துப்பாக்கி சூட்டில் பலியானவரின் உடலை காவலர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கலவரத்தில் காயமடைந்தோர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

மதியம் 12.38 : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வாகனங்கள் உட்பட சுற்றுப்பகுதியில் உள்ள வாகனங்களுக்கும் தீ வைப்பு.

Sterlite Protest Clash (3)

மதியம் 12.31 : ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த அலுவலர்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம். அலுவலகத்தில் உள்ள அனைத்து ஊழையர்களும் எஸ்.பி அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் மாற்றம்.

மதியம் 12.25 : மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து 2000 போலீசார் தூத்துக்குடிக்கு விரைந்தனர்.

மதியம் 12.21 : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைப்பு.

May 2018

மதியம் 12.15 : பதற்றத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி.

மதியம் 12.11 : ஆட்சியர் அலுவலகம் உள்ளே நுழையும் போராட்டக்காரர்களை தடுக்க ஏராளமான போலீசார் திரண்டுள்ளனர்.

மதியம் 12.05 : தடையை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் சென்ற போராட்டக்காரர்கள். சூழலை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் திணரல்.

காலை 11.40 : இந்தப் பதற்றமான சூழலைக் கட்டுக்குள் கொண்டு வரத் தடியடி நடத்தப்பட்டு பின்னர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீசார் அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

sterlite

காலை 11.20 : போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் போலீசாரின் வாகனம் மீதும் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அடுத்த சில நிமிடங்களிலேயே போலீஸ் வாகனத்தைப் போராட்டத்தில் ஈடுபட்டோர் சேதப்படுத்தி கவிழ்த்தனர்.

Sterlite Protest

காலை 11.15 : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் திடீர் கலவரம்.

 

Sterlite Copper Industries
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment