ஹீரோ மோட்டோகார்ப் சமீபத்தில் ஹீரோ க்ஸூம் (Xoom) மாடலை அறிமுகப்படுத்தியது. இது, மேட்ஸ்ரோ எட்ஸ் (Maestro Edge) மற்றும் பிளஸர் பல்ஸ் (Pleasure Plus) வகை ஸ்கூட்டிக்கு பிறகு 110cc பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்ட 3ஆவது ஸ்கூட்டர் ஆகும்.
ஹீரோ க்ஸூம் ஒரு ஸ்போர்ட்டியான தோற்றமுடைய ஸ்கூட்டர் ஆகும். இது ஹைடெக் அம்சங்களைக் கொண்டுள்ளது மற்றும் நன்கு அறியப்பட்ட இயந்திரத்தைக் கொண்டுள்ளது. ரூ.68,559 விலையில் கிடைக்கும் இந்த ஸ்கூட்டர் புதிய ஹோண்டா ஆக்டிவா எச்-ஸ்மார்ட்டுக்கு சவால் விடும் அளவில் உள்ளதா? என்பதை பார்க்கலாம்.
வடிவமைப்பு மற்றும் வண்ணங்கள்
ஹீரோ க்ஸூம் ஒரு கவர்ச்சியான தோற்றமுடைய ஸ்கூட்டராகும். இது H-வடிவ LED DRL உடன் LED ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப் பெறுகிறது.
-
ஹீரோ க்ஸூம்
மேலும், ஸ்கூட்டர் பாடி லைன்களில் ஸ்போர்ட்டி கட் மற்றும் கிரீஸ்கள், மல்டி-ஸ்போக் அலாய் வீல்கள் மற்றும் எச்-வடிவ எல்இடி டெயில்லாம்ப் ஆகியவற்றைப் பெறுகிறது.
இவை, வை ஸ்போர்ட்ஸ் ரெட், போல்ஸ்டார் ப்ளூ, பிளாக், மேட் ஆப்ராக்ஸ் ஆரஞ்சு மற்றும் பேர்ல் சில்வர் ஒயிட் உள்ளிட்ட 5 வண்ணங்களில் கிடைக்கின்றன.
அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு
ஹீரோ க்ஸூம் 110cc ஸ்கூட்டர் ஆகும். Xoom ஆனது டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ட்ரிப் மீட்டர், கடிகாரம், நிகழ் நேர மைலேஜ் போன்ற பல தகவல்களைக் காட்டும் அனைத்து டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைக் கொண்டுள்ளது. மேலும், இது புளூடூத் இணைப்பைப் பெறுகிறது.
-
ஹீரோ க்ஸூம்
விலை
டெல்லியில் இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.68599 முதல் ரூ.76669 வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த ஸ்கூட்டி ஹோண்டா ஆக்டிவா ஹெச். ஸ்மார்ட், டிவிஎஸ் ஜூபிடர் உள்ளிட்ட ஸ்கூட்டிகளுக்கு போட்டியாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/