scorecardresearch

125 சி.சி., செம்ம ஸ்டைலிஷ்.. வந்தாச்சு நியூ ஹோண்டா.. இனி ஹீரோ ஸ்பிளண்டர் அவ்ளோதானா?

2023 புதிய ஹோண்டா SP 125 ரூ.85,131, எக்ஸ்-ஷோரூம் ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

2023 Honda SP 125 launched in India check the Price and others
மேம்படுத்தப்பட்ட எஸ்.பி. 125 புதிய ஹோண்டா பைக்

ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர்ஸ் ஆஃப் இந்தியா மேம்படுத்தப்பட்ட எஸ்.பி. 125 புதிய ஹோண்டா பைக் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த 125சிசி பிரீமியம் மோட்டார்சைக்கிள் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. அதில், ட்ரம் ப்ரேக், அலாய் வீல்களுடன் உள்ள பைக்குகள் ரூ.85,131க்கும், டிஸ்க் ப்ரேக் அலாய் வீல் பைக் ரூ.89131க்கும் கிடைக்கிறது.

மேலும், இந்த வாகனத்தில் உமிழ்வு தரநிலைகளை சந்திக்க OBD-2 இணக்க எஞ்சின் உள்ளது. இது ஏப்.1ஆம் தேதி முதல் உள்ள வாகனங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுமட்டுமின்றி, ஹோண்டா SP 125 ஆனது 123.94சிசி, ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்டு, ஃப்யூவல்-இன்ஜெக்டட் இன்ஜின் ஆகும். இந்த மோட்டார் 10.7 bhp மற்றும் 10.9 Nm, 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா புதிய மேட் மார்வெல் ப்ளூ மெட்டாலிக் பெயிண்ட் ஸ்கீம் மற்றும் SP 125 உடன் பரந்த 100மிமீ பின்புற டயரையும் வழங்குகிறது.
எனினும் இந்த பைக்கின் மைலேஜ் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பைக் சந்தையில், ஹீரோ கிளாமர், ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர், ஹோண்டா ஷைன், டிவிஎஸ் ரைடர் போன்ற மற்ற 125சிசி என்ஜின்களும் உள்ளன. இந்தப் புதிய வாகனம் இதற்குப் போட்டியாக பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: 2023 honda sp 125 launched in india check the price and others