மூத்த குடிமக்கள் மூலதனப் பாதுகாப்பு மற்றும் வழக்கமான வருவாய்க்கு முன்னுரிமை அளிக்கின்றனர். எனவே, அவர்கள் தங்களுடைய வெளிப்படையான நிலைத்தன்மை மற்றும் வட்டி செலுத்துவதன் மூலம் நிலையான வருமானத்திற்காக நிலையான வைப்புகளில் (FDs) முதலீடு செய்கிறார்கள். நிலையான வைப்புகளில் பெறப்படும் வட்டிக்கு வரி விதிக்கப்படும். ஆனால் மூத்தக் குடிமக்களுக்கு வட்டி விகிதம் அதிகம் கிடையாது.
அந்த வகையில் மூத்தக் குடிமக்களுக்கு தனியார் வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.
எஸ்.பி.எம். பேங்க் இந்தியா
எஸ்.பி.எம் பேங்க் இந்தியா (SBM Bank India) மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 8.10 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதனால், 3 ஆண்டுகளுக்கு பின்னர் ரூ.1 லட்சம் முதலீடு ரூ.1,27,198 ஆக உயரும்.
டி.சி.பி வங்கி
டி.சி.பி (DCB) வங்கி மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 8.05 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூன்றாண்டுகளுக்கு முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சமானது ரூ.1,27,011 ஆக உயரும்.
ஆர்.பி.எல் வங்கி
ஆர்.பி.எல் வங்கி மற்றும் யெஸ் வங்கி ஆகியவை மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 8 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகின்றன. இதில், மூன்றாண்டுகளுக்கு முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சமானது ரூ.1,26,824 ஆக உயரும்.
பந்தன் வங்கி
பந்தன் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவை மூத்த குடிமக்களுக்கான மூன்று ஆண்டு எஃப்டிகளுக்கு 7.75 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சமானது ரூ.1,25,895 ஆக உயரும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“