Advertisment

ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9 சதவீதம் வட்டி: இந்த 4 வங்கியை பாருங்க!

ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளுக்கு இந்த 4 வங்கிகள் 9 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
A small finance bank offering 9 percent interest on fixed deposits

மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் முதலுக்கு பாதுகாப்போடு, உத்தரவாதமான வட்டி விகிதங்களை வழங்கும் முதலீடுகளில் ஃபிக்ஸட் டெபாசிட்கள் முதலிடத்தில் உள்ளன.

Advertisment

இந்த ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் ஸ்மால் வங்கிகள் 9 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன. எனினும் ஸ்மால் வங்கிகளில் ரூ.5 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு மட்டுமே காப்பீடு வழங்கப்படும். இதை முதலீட்டாளர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தற்போது நாம் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்கு 9 சதவீதம் வரை வட்டி வழங்கும் ஸ்மால் வங்கிகள் மற்றும் அதன் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

ஈகுடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

ஈகுடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 889 முதல் 1095 (3 ஆண்டுகள்) வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு முதலீட்டாளர்களுக்கு 8 சதவீதமும், மூத்தக் குடிமக்களுக்கு 8.50 சதவீதமும் வட்டி வழங்குகிறது.

ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 889 முதல் 1095 (3 ஆண்டுகள்) வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு முதலீட்டாளர்களுக்கு 8 சதவீதமும், மூத்தக் குடிமக்களுக்கு 8.50 சதவீதமும் வட்டி வழங்குகிறது.

உத்கர்ஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

உத்கர்ஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 1000 முதல் 1500 நாள்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 8.25 சதவீதம் வட்டி வழங்குகிறது. அதேநேரம் மூத்தக் குடிமக்களுக்கு 8.85 சதவீதம் வட்டி கிடைக்கிறது.

சூர்யாடே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

சூர்யாடே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி சாதாரண மக்களுக்கு 8.6 சதவீதம் வட்டியும், மூத்தக் குடிமக்களுக்கு 9.1 சதவீதம் வட்டியும் வழங்குகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment