குழந்தைகள் ஆதார் பயோமெட்ரிக் அப்டேட்: இனி ரூ.125 கட்டணம் இல்லை

சமீபத்திய அறிவிப்பின்படி, 7 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முதல் கட்டாயப் பயோமெட்ரிக் அப்டேட்டுக்கான (MBU-1) அனைத்துக் கட்டணங்களையும் UIDAI முழுமையாக ரத்து செய்துள்ளது.

சமீபத்திய அறிவிப்பின்படி, 7 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முதல் கட்டாயப் பயோமெட்ரிக் அப்டேட்டுக்கான (MBU-1) அனைத்துக் கட்டணங்களையும் UIDAI முழுமையாக ரத்து செய்துள்ளது.

author-image
abhisudha
New Update
Aadhaar biometric update

Aadhaar update latest News Tamil

ஆதார் அட்டை (Aadhaar Card) இன்று பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரது வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. குறிப்பாக, குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கை, போட்டித் தேர்வுகள் என அரசின் பல சலுகைகளைப் பெற அப்டேட் செய்யப்பட்ட ஆதார் அட்டை மிக அவசியம். இதை மனதில் கொண்டே, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) குழந்தைகளுக்கான ஒரு மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Advertisment

6 கோடி குழந்தைகளுக்குக் கிடைத்த ஜாக்பாட்!

மேண்டட்ரி பயோமெட்ரிக் அப்டேட் (Mandatory Biometric Update - MBU) என்ற நடைமுறையின் கீழ், குழந்தைகளுக்கு இரண்டு முறை பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பிப்பது கட்டாயம்.

முதல் அப்டேட் (MBU-1): குழந்தை 5 வயதை அடைந்த பிறகு (பொதுவாக 5 முதல் 7 வயதுக்குள்).

இரண்டாம் அப்டேட் (MBU-2): குழந்தை 15 வயதை அடைந்த பிறகு (பொதுவாக 15 முதல் 17 வயதுக்குள்).

இந்தக் கட்டாயப் புதுப்பித்தலின் போது, கைரேகைகள், கருவிழி ஸ்கேன் மற்றும் புகைப்படம் ஆகியவை அப்டேட் செய்யப்படுகின்றன.

Advertisment
Advertisements

சமீபத்திய அறிவிப்பின்படி, 7 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முதல் கட்டாயப் பயோமெட்ரிக் அப்டேட்டுக்கான (MBU-1) அனைத்துக் கட்டணங்களையும் ஆதார் ஆணையம் (UIDAI) முழுமையாக ரத்து செய்துள்ளது! இதனால், சுமார் 6 கோடி குழந்தைகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போது முதல் கட்டணம் இல்லை?

இந்தக் கட்டண ரத்து சலுகை அக்டோபர் 1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தச் சலுகை ஓராண்டு காலத்திற்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், இந்தக் கட்டாய அப்டேட்டுகளைச் செய்யத் தவறும் பட்சத்தில், ஒவ்வொரு பயோமெட்ரிக் அப்டேட்டுக்கும் ரூ.125 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இப்போது இந்த முக்கிய முடிவின் மூலம், 5 முதல் 17 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் பயோமெட்ரிக் அப்டேட் முற்றிலும் இலவசமாகிறது.

பெற்றோர்களுக்கான அவசர வேண்டுகோள்!

அரசு அதிகாரிகள் வெளியிட்டுள்ள ஆலோசனையின்படி, பெற்றோர்கள்/பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளின் பயோமெட்ரிக் விவரங்களை உடனடியாக ஆதார் அட்டையில் புதுப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏனெனில், அப்டேட் செய்யப்பட்ட ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே, பள்ளிச் சேர்க்கை மற்றும் நுழைவுத் தேர்வுப் பதிவுகள் போன்ற சேவைகளைத் தடையில்லாமல் பெற முடியும்.

உங்கள் குழந்தையின் எதிர்கால நலனுக்காக, தாமதிக்காமல் இந்தக் கட்டணமில்லா சலுகையைப் பயன்படுத்தி ஆதார் அப்டேட்டைச் செய்துவிடுவது மிக நல்லது.

இந்த செய்தியை ஆங்கில மொழியில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்.

Aadhaar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: