வெறும் ஆதார் கார்டு மட்டும் வச்சு உடனடி கடன்: ஆனா இதில் இந்த ஆபத்தும் இருக்கு மக்களே!

உங்கள் ஆதார் அட்டையும் (Aadhaar Card) ஒரு ஸ்மார்ட்போனும் இருந்தால் போதும்! வெறும் ₹2,000 வரையிலான அவசரக் கடனை, ஆவண சமர்ப்பிப்பு, நீளமான படிவங்கள், அலுவலக விஜயங்கள் என எந்தச் சிக்கலும் இல்லாமல், நிமிடங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் ஆதார் அட்டையும் (Aadhaar Card) ஒரு ஸ்மார்ட்போனும் இருந்தால் போதும்! வெறும் ₹2,000 வரையிலான அவசரக் கடனை, ஆவண சமர்ப்பிப்பு, நீளமான படிவங்கள், அலுவலக விஜயங்கள் என எந்தச் சிக்கலும் இல்லாமல், நிமிடங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

author-image
abhisudha
New Update
Aadhaar Instant loan

Aadhaar Instant loan Rs 2000 Aadhaar e KYC loan Online cash loan Instant personal loan Fintech small loan

திடீர் மருத்துவச் செலவு, மளிகைப் பொருட்கள் பற்றாக்குறை, அல்லது மொபைல் ரீசார்ஜ் போன்ற சின்னச் சின்ன அவசரத் தேவைகள் உங்களை நெருக்கடியில் தள்ளுகிறதா? கையில் பணம் இல்லாமல் தவிக்கும்போது, ஒரு ₹2,000 கடன் கிடைத்தால் போதும் என்று நீங்கள் நினைப்பதுண்டா? 

Advertisment

இனி, கடனுக்காக அலுவலகங்களுக்கு அலையவோ, நீளமான விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்யவோ தேவையில்லை! உங்கள் ஆதார் அட்டையும் (Aadhaar Card) ஸ்மார்ட்போனும் இருந்தால் போதும்!

ஆதார் அட்டை மூலம் உடனடி கடன் 

ஆதார் அடிப்படையிலான மின்-சரிபார்ப்பு (e-KYC) முறையைப் பயன்படுத்தி, ஆன்லைன் நிதி நிறுவனங்கள் (Fintech) இப்போது ஆவணச் சிக்கல்கள் இன்றி உடனடியாகக் கடன் வழங்குகின்றன. இந்த முறையால் சம்பளம் பெறுவோர், மாணவர்கள் என அனைவரும் குறுகிய கால நிதியுதவியை எளிதாகப் பெறலாம். 

கடன் பெறுவது எப்படி? 4 சுலபமான வழிகள்:

ஆர்.பி.ஐ அங்கீகாரம்: முதலில் KreditBee, NIRA ,SmartCoin அல்லது TrueBalance போன்ற, இந்திய ரிசர்வ் வங்கியால் பதிவுசெய்யப்பட்ட ஒரு அங்கீகரிக்கப்பட்ட கடன் செயலியையோ அல்லது இணையதளத்தையோ தேர்வு செய்து பதிவிறக்கம் செய்யவும்.

Advertisment
Advertisements

ஆதார் சரிபார்ப்பு: உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு, பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி-ஐப் பயன்படுத்தி உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கவும். உங்கள் அடிப்படை விவரங்கள் ஆதார் இணையதளத்தில் இருந்து (UIDAI) நேரடியாகப் பெறப்படும்.

வருமான விவரங்கள்: உங்கள் வருமானம் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைப் பூர்த்தி செய்யவும். ஒப்புதல் கிடைத்தவுடன், குறுகிய காலத் தவணையைத் (15-30 நாட்கள்) தேர்வு செய்யவும்.

உடனடிப் பணம்: நீங்கள் டிஜிட்டல் கையொப்பமிட்டவுடன், உங்கள் ₹2,000 உடனடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். உங்களுக்குத் திருப்பிச் செலுத்தும் திட்டம், EMI அல்லது மொத்தமாகச் செலுத்தும் வசதி மற்றும் மின்னஞ்சல் அல்லது SMS மூலம் நினைவூட்டல்கள் வழங்கப்படும்.

கவனிக்க: இந்தக் கடன்களின் வட்டி விகிதங்கள் அதிகமாகவும், திருப்பிச் செலுத்தும் காலம் குறுகியதாகவும் இருக்கும். எனவே, விதிமுறைகளை நன்கு படித்துப் புரிந்துகொண்டு, மிகவும் அவசியமானால் மட்டும் பயன்படுத்தவும். இது நீண்ட காலக் கடனுக்கான ஆதாரம் அல்ல, குறுகிய கால அவசரத் தேவைக்கு மட்டுமே!

Loan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: