Advertisment

ஆன்லைனில் ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது இனி இடியாப்ப சிக்கல் தான்.. காரணம் தெரிஞ்சுகோங்க.

ஆதார் அட்டையில் 12 இலக்க அடையாள எண்ணை பெற்றிருப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
aadhar download

aadhar download

aadhar download : இந்தியாவில் ஆதார் அட்டை என்பது அத்தியாவசிய ஆவணமாக மாறிவிட்டது.பேடிம், ஆன்லைன் டாக்ஸி சர்வீஸ், ஆன்லைன் வங்கி சேவை, புதிய சிம் கார்டு வாங்குதல் என பல்வேறு வசதிகளுக்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. நம்மில் பெரும்பாலான இந்தியர்கள், ஆதார் அட்டையில் 12 இலக்க அடையாள எண்ணை பெற்றிருப்போம்.

Advertisment

இந்த எண் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் அடையாள மற்றும் முகவரி சான்றாக பயன்படுகிறது.

ஒவ்வொரு தனி நபரும் ஒரே ஒரு முறை பதிவு செய்து கொண்டால் போதுமானது. இந்த பதிவு இலவசமாகும்.இப்போது, எளிதாக இணையத்தில் ஆதார் அட்டை பதிவிறக்க முடியும் மற்றும் வீட்டிற்கு வரும் வரை காத்திருக்கத் தேவையில்லை. இருப்பினும், இ ஆதார் அட்டையை பதிவிறக்க ஆதார் அட்டை விண்ணப்பம் ஒப்புதல் பெற்றிருத்தல் வேண்டும்.

மத்திய அரசு "ஆதார் அட்டைக்கென்று" தனி ஆணையம் அமைத்துள்ளது. இதன் பெயர் "Unique Identification Authority of India" ஆகும். இந்த ஆணையம் இந்தியா முழுவதும் ஆதார் சேவை மையத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் அனைவரும் இந்த சேவையத்திற்கு சென்று "ஆதார் அட்டையை" பெற விண்ணப்பிக்கலாம் மற்றும் ஆதார் அட்டையில் உள்ள திருத்ததை மேற்கொள்ளலாம்.

பிறந்த தேதி,தொலைபேசி எண்,முகவரி உள்ளிட்ட திருத்தங்கள் மட்டுமே நம்மால் மேற்கொள்ளும் வகையில் ஆதார் ஆணையம் இணையதள வசதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருத்ததை மேற்கொள்ள முதலில் ஆதார் அட்டையில் "தொலைபேசி எண்" இணைத்திருக்க வேண்டும். அப்போது தான் இணையதளத்தை பயன்படுத்தி திருத்தம் மேற்கொள்ள முடியும்.

"ஆதார் அட்டை" பிளாஸ்டிக்கில் "ஸ்மார்ட் கார்டு" வடிவில் வேண்டுமென்றால் இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதற்கான இணையதள முகவரி https://resident.uidai.gov.in/aadhaar-reprint ஆகும். இதில் ரூபாய் 50 கட்டணத்தை இணைய தள வழியில் செலுத்தி AADHAAR CARD - ன் ENROLLMENT NO மற்றும் DATE AND TIME யை பதிவு செய்தால் பதிவுச்செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு "OTP" வரும். பின்பு "OTP" -யை பதிவிட்டு "Aadhaar Smart Card"-யை புக் செய்யலாம். பின் ஐந்து நாட்களுக்குள் "ஆதார் அட்டை" தபால்காரர் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த முறையில் தான் இப்போது புதிய சிக்கல் ஒன்று வடிவெடுத்துள்ளது. இதுவரை ஆன்லைன் மூலம் ஆதார் கார்டை டவுன்லோட் செய்து வந்தவர்கள் இனிமேல் செய்ய முடியாது. அதற்கு காரணம், ஆதாரில் அவர்கள் தங்களது மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும். அல்லது ஆதாரில் பதிவு செய்திருக்கும் மொபைல் எண்ணானது கட்டாயம் உபயோகத்தில் இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால் மட்டுமே உங்களால் ஆன்லைனில் ஆதார் கார்டை திருத்தம் செய்யவோ அல்லது டவுன்லோட் செய்யவோ முடியும்.

Aadhaar Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment