இந்தியாவில் உள்நாட்டு பயணிகள் விமான போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கில் விமான நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கிவருகின்றன.
இதில் முதன்மையானதாக ஆகாச ஏர் விமான போக்குவரத்து நிறுவனம் திகழ்கிறது. இந்த நிறுவனம், கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் பல்வேறு சலுகைகளை அறிவித்துவருகிறது. அந்த வகையில் பயணிகளுக்கு உணவு, குடிநீர் என முதலில் சலுகைகளை வீசியது. தற்போது ஒருபடி மேலேபோய் ரயில் கட்டணத்தில் விமான டிக்கெட்-ஐ சாத்தியப்படுத்தியுள்ளது.
அதன்படி நீங்கள் சரியான நேரத்தில் முன்பதிவு செய்தால், மிக குறைந்த கட்டணத்தில் நாட்டை சுற்றி வரலாம். கொச்சி-பெங்களூரு விமான பயணம் ரூ.1496க்கு சாத்தியமாகும்.
அதேபோல் அகமதாபாத்-மும்பை, பெங்களூரு-கொச்சி, மும்பை-அகமதாபாத் கட்டணங்கள் முறையே ரூ.1600 மற்றும் ரூ.1751 மட்டுமே.
இதில் உச்சப்பட்சமாக டெல்லி-அகமதாபாத் கட்டணம் ரூ.2592 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஏசி பெட்டி ரயில் கட்டணங்களை விட குறைவாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil