Subscribe
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்
  • வைரல்
  • தொழில்நுட்பம்
ad_close_btn
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • பொழுதுபோக்கு
  • உணவு
  • புகைப்படத் தொகுப்பு
  • லைஃப்ஸ்டைல்
  • சிறப்பு செய்தி
  • கல்வி - வேலை வாய்ப்பு
  • விளையாட்டு
  • வணிகம்

Powered by :

செய்திமடலுக்கு வெற்றிகரமாக குழுசேர்ந்துள்ளீர்கள்.
வணிகம்

'அடல் பென்ஷன் யோஜனா' திட்டத்தில் சேர புதுப் படிவம் கட்டாயம்: ரூ. 5,000 முதியோர் பென்ஷன் பெறுவது எப்படி?

இந்தத் திட்டத்தின் கீழ், சந்தாதாரர் 60 வயதை எட்டியவுடன் மாதத்திற்கு ரூ. 1,000 முதல் ரூ. 5,000 வரை உத்தரவாதமான குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும். ஓய்வூதியத் தொகை சந்தாதாரர்களின் பங்களிப்புகளைப் பொறுத்தது.

Written byabhisudha

இந்தத் திட்டத்தின் கீழ், சந்தாதாரர் 60 வயதை எட்டியவுடன் மாதத்திற்கு ரூ. 1,000 முதல் ரூ. 5,000 வரை உத்தரவாதமான குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும். ஓய்வூதியத் தொகை சந்தாதாரர்களின் பங்களிப்புகளைப் பொறுத்தது.

author-image
abhisudha
08 Oct 2025 16:16 IST

Follow Us

New Update
Atal Pension Yojana

Atal Pension Yojana new rules: APY registration process revised for members – Details here

அடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டத்தில் சேருவதற்கான சந்தாதாரர் பதிவுப் படிவத்தை (Subscriber Registration Form) அரசாங்கம் மாற்றியமைத்துள்ளது. அக்டோபர் 1, 2025 முதல், திருத்தப்பட்ட புதிய அடல் பென்ஷன் யோஜனா (APY) படிவம் மட்டுமே புதிய பதிவுகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என அஞ்சல் துறை வெளியிட்டுள்ள அலுவலக குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்தப் புதிய மாற்றம், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA-இன்) சமீபத்திய வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப கொண்டு வரப்பட்டுள்ளது. இது சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் மக்களைச் சேர்ப்பதை மேலும் எளிதாக்கவும், முறைப்படுத்தவும் உதவுகிறது.

முன்னதாகப் பயன்படுத்தப்பட்ட பழைய பதிவு வடிவம் செப்டம்பர் 30, 2025-க்குப் பிறகு நிறுத்தப்பட்டுவிட்டது. மத்திய பதிவு பராமரிப்பு முகமையாகச் (Central Recordkeeping Agency) செயல்படும் புரோட்டியன் (Protean) (முன்னர் NSDL) பழைய படிவங்களை இனி ஏற்றுக்கொள்ளாது.

அடல் பென்ஷன் யோஜனா (APY) என்றால் என்ன?

அடல் பென்ஷன் யோஜனா என்பது நாட்டின் அமைப்பு சாரா தொழிலாளர்களை முதன்மையாகக் கொண்டுள்ள ஒரு ஓய்வூதியத் திட்டம். இத்திட்டத்தின் கீழ் சேரும் சந்தாதாரர்களுக்கு, 60 வயதை அடைந்தவுடன், அவர்களின் பங்களிப்பைப் பொறுத்து, மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ. 1,000 முதல் ரூ. 5,000 வரை உத்தரவாதமான ஓய்வூதியம் கிடைக்கும். இந்தியாவில் குடியுரிமை பெற்ற எவரும் இந்தத் திட்டத்தில் சேரலாம்.

Advertisment
Advertisements

சேருவதற்கான தகுதிகள் என்னென்ன?

அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேர விண்ணப்பதாரருக்குப் பின்வரும் தகுதிகள் இருக்க வேண்டும்:

இந்தியக் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.

18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

வங்கியில் அல்லது அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

அக்டோபர் 1, 2022 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ வருமான வரி செலுத்துபவராக (Income Tax Payer) இருக்கக் கூடாது.

அடல் பென்ஷன் யோஜனா கணக்கின் அவ்வப்போது வரும் அறிவிப்புகளைப் பெறுவதற்கு வசதியாக, விண்ணப்பதாரர் பதிவு செய்யும் போது தங்கள் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை வங்கிக்கு வழங்கலாம்.

புதிய படிவத்தின் சிறப்பம்சங்கள்

புதிய படிவத்தில் ஒரு முக்கிய அம்சம் உள்ளது: அது FATCA/CRS அறிவிப்பு ஆகும். வெளிநாட்டு குடியுரிமை அல்லது வரி வசிப்பிடத்தைக் (Tax Residency) கொண்ட விண்ணப்பதாரர்களைக் கண்டறிய இது கட்டாயம் சேர்க்கப்பட்டுள்ளது. அஞ்சல் சேமிப்புக் கணக்குகளுடன் இணைக்கப்படுவதால், இந்தியாவில் வசிக்கும் குடிமக்கள் (Resident Indian Citizens) மட்டுமே அஞ்சல் அலுவலகங்கள் மூலம் அடல் பென்ஷன் யோஜனா (APY) கணக்கைத் தொடங்க முடியும்.

அனைத்து அஞ்சல் அலுவலகங்களும் இந்தத் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களைப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கவும், புதிய அடல் பென்ஷன் யோஜனா பதிவுகளுக்கு திருத்தப்பட்ட படிவங்களை மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"மேற்கண்டவற்றைக் கருத்தில் கொண்டு, 01.10.2025 முதல் புதிய சந்தாதாரர்களை திட்டத்தில் சேர்ப்பதற்கு புதிய அடல் பென்ஷன் யோஜனா (APY) சந்தாதாரர் பதிவுப் படிவம் மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அடல் பென்ஷன் யோஜனா தொடர்பான நடவடிக்கைகளுக்கு அங்கீகரிக்கப்படாத அல்லது பொதுவான படிவங்களைப் பயன்படுத்தக் கூடாது" என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

Business

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news
logo

இதையும் படியுங்கள்
Read the Next Article
Latest Stories
Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news

Latest Stories
Latest Stories
    Powered by


    Subscribe to our Newsletter!




    Powered by
    மொழியை தேர்ந்தெடுங்கள்
    Tamil

    இந்தக் கட்டுரையைப் பகிரவும்

    இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்
    அவர்கள் பின்னர் நன்றி சொல்வார்கள்

    Facebook
    Twitter
    Whatsapp

    நகலெடுக்கப்பட்டது!