இந்திய சந்தைகளில் பஜாஜ் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளன. 1980-களில் பஜாஜ் ஸ்கூட்டர்களுக்காக 10 ஆண்டுகள் வரை காத்திருந்த காலமும் உண்டு.
மேலும், 1983ஆம் ஆண்டுகளில் 5 லட்சம் ஸ்கூட்டர்கள் வரை விற்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பஜாஜ் தற்போது புதிய Chetak என்ற பெயரில் எலெக்ட்ரானிக் ஸ்கூட்டியை களமிறக்கி உள்ளது.
Chetak EV ஆனது 3 kWh பேட்டரி பேக் ஆகும், இது பெல்ட்கள் அல்லது சங்கிலிகள் இல்லாத திடமான கியர் டிரைவ் சிஸ்டம் மூலம் பின்புற சக்கரங்களுக்கு 16 Nm முறுக்குவிசையை வழங்குகிறது.
இதன் விளைவாக நகர சூழ்நிலைகளிலும் திறந்த சாலைகளிலும் சுமூகமான சவாரி செய்ய முடியும்.
இந்த ஸ்கூட்டிகளில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 85-90 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். சார்ஜ் செய்ய 5 மணி நேரம் எடுக்கும்.
யூஎஸ்பி சார்ஜிங் வசதியும் உள்ளது. பேட்டரி அதிகப்பட்ச பவர் 4080 ஆகும். பைக்கில் 70 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம்.
இதன் விலை ரூ.1,46,175 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகர்புறங்களில் சொகுசாக சவாரிக்கு இந்தப் ஸ்கூட்டிகள் உகந்ததாக உள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/