post-office-scheme | குழந்தைகளின் எதிர்கால நிதி திட்டமிடலை கருத்தில் கொண்டு புத்திசாலியான பெற்றோர் முதலீடுகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். அந்த முதலீடு குறைந்த இடர்பாடுகள் மற்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
அகவே அவர் பங்குச் சந்தை போன்ற வணிகத்தில் முதலீடு செய்ய தயங்குகின்றனர். குழந்தைகள் பெயரில் அதிக பாதுகாப்பற்ற ரிஸ்க் எடுக்க தயங்குவதே இதற்கு காரணம்.
மேலும் இவர்கள், ஃபிக்ஸட் டெபாசிட் (FD), பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) போன்ற உத்தரவாதமான வருமானம் தரக்கூடிய முதலீடுகளில் கவனம் செலுத்துகின்றனர்.
இத்தகைய ஒரு அஞ்சல் அலுவலகத் திட்டம்தான் பால் ஜீவன் பீமா திட்டம். இது குழந்தைகளுக்கு ஆயுள் காப்பீட்டுத் தொகையையும் வழங்குகிறது. இந்த திட்டம் பற்றி பார்ப்போம்.
பால் ஜீவன் பீமா திட்டம் திட்டத்தின் அம்சங்கள்
- இந்த திட்டம் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அஞ்சல் ஆயுள் காப்பீட்டின் கீழ் இயங்குகிறது. இந்தத் திட்டத்தில், முதிர்ச்சியின் போது ரூ. 3 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.
- இத்திட்டத்தின் பயன் அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு வழங்கலாம்.
5-20 வயது குழந்தைகள் பெயரில் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
உறுதியான வருமானம்
- அஞ்சல் ஆயுள் காப்பீட்டின் கீழ், ரூ. 3 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்கும், அதேசமயம் நீங்கள் ரூரல் போஸ்டல் லைஃப் இன்சூரன்ஸ் (ஆர்.பி.எல்.ஐ) கீழ் பாலிசி எடுத்திருந்தால், பாலிசிதாரர் ரூ.1 லட்சம் வரை காப்பீட்டுத் தொகையைப் பெறுவார்.
இந்த பாலிசியை கவர்ச்சிகரமானதாக மாற்ற, எண்டோமென்ட் பாலிசி போல போனஸ் சேர்க்கப்பட்டுள்ளது.
- கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டின் கீழ் இந்த பாலிசியை நீங்கள் எடுத்திருந்தால், ரூ. 1000 காப்பீட்டுத் தொகையில், உங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.48 போனஸாக வழங்கப்படும்.
- அதேசமயம் அஞ்சல் ஆயுள் காப்பீட்டின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் ரூ.52 போனஸ் வழங்கப்படுகிறது.
பால் ஜீவன் பீமா திட்டத்தின் பயன்கள்
- 5 ஆண்டுகளுக்கு வழக்கமான பிரீமியம் செலுத்திய பிறகு, இந்த பாலிசி செலுத்தப்பட்ட பாலிசியாக மாறும்.
- இந்தத் திட்டத்தில், பிரீமியம் செலுத்துவது பெற்றோரின் பொறுப்பாகும், ஆனால் பாலிசி முதிர்ச்சியடைவதற்குள் அவர்கள் இறந்துவிட்டால், குழந்தையின் பிரீமியம் தள்ளுபடி செய்யப்படுகிறது.
- குழந்தை இறந்தால், காப்பீட்டுத் தொகை போனஸுடன் நாமினிக்கு வழங்கப்படும்.
கடன் வசதி இல்லை
- இந்தத் திட்டத்தில் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுதோறும் முதலீடு செய்யலாம்.
- இந்தத் திட்டத்தில் கடன் வசதி இல்லை.
- குழந்தைகளுக்கு இந்த பாலிசி எடுக்கும்போது மருத்துவ பரிசோதனை தேவையில்லை.
இருப்பினும், குழந்தை ஆரோக்கியமாக இருப்பது முக்கியம்.
- இந்த திட்டத்தில் பாலிசியை சரண்டர் செய்வதற்கான எந்த ஏற்பாடும் இல்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“