பொதுத்துறை வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் உடன் போட்டியிடும் வகையில் தற்போது அஞ்சல சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் உள்ளன.
அந்த வகையில் கிஷான் விகாஸ் பத்திராவில் முதலீடு செய்தால் உங்கள் பணம் 10 ஆண்டுகளில் டபுள் ஆகிவிடும். தற்போது இந்தத் திட்டத்தில் 7.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
ரூ.1000 முதல் இதில் முதலீடு செய்யலாம். அதிகப்பட்ச வரம்பு இல்லை. 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெயரில் மட்டுமே முதலீடு செய்ய முடியும்.
வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்
பொதுத்துறை முதல் தனியார் வங்கிகள் வரை ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு பல்வேறு கவர்ச்சிகரமான வட்டியை வழங்கிவருகின்றன.
எஸ்.பி.ஐ வங்கி 10 ஆண்டுகள் கால வைப்புகளுக்கு 7.5 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி 7.3 சதவீதம் வட்டி வழங்குகிறது.
ஹெச்.டி.எஃப்.சி. மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 7.75 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 7.50 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
இருப்பினும் சில ஸ்மால் வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 9.5 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“