bank loan apply bank loans apply loan : பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மக்களுக்கு இந்த செய்தி கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி வழங்கப்படுகிறது. உரிய ஆவணங்களை சமர்பித்து கடன் பெறலாம்.
Advertisment
தகுதி:
1.ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
2 விண்ணப்பதாரர் 18 – 60
3. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன்
4. பொதுகால கடன் திட்டம், தனியார் கடன் திட்டம் மூலமாக அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி
5. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம்
பெண்களுக்கு சலுகைகள்:
1. பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடனுதவி
2. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம்
3. சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுயஉதவிக்குழு மகளிர் உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு ரூ.15 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது.
4. ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதம் வசூலிக்கப்படும்.
ஆண்களுக்கு கடன்:
சிறுகடன் வழங்கும் திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு உறுப்பினராக உள்ள ஆண்களுக்கு அதிகபட்ச கடன்தொகை ரூ.1 லட்சம் வரையும், ஒரு குழுவுக்கு ரூ.15 லட்சம் கடன் வழங்கப்படும்.
2. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் ஆகும். கறவை மாடு 2 வாங்க ரூ.60ஆயிரம் கடனுதவி வழங்கப்படும். இதற்கு ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளில் கடன் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியில் ஒப்படைக்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil