/tamil-ie/media/media_files/uploads/2017/06/A667.jpg)
உங்களது மதிப்புமிக்க பொருட்களை வங்கி லாக்கரில் வைப்பதுதான் மிகவும் பாதுகாப்பான ஒன்று என நீங்கள் நினைத்தால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், "வங்கி லாக்கரில் வைக்கப்படும் வாடிக்கையாளர்களின் பொருட்கள் காணாமல் போனால், வங்கி பொறுப்பாகாது" என்று அறிவித்துள்ளது. இந்த கசப்பான உண்மையை ஆர்பிஐ இப்போதுதான் தெரிவித்திருக்கிறது.
தனியார் வங்கிகள் கூட, இந்த விஷயத்தில் இதே போன்றதொரு நிலைப்பாட்டில் தான் உள்ளன. ஆனால், அவைகள் சற்று வேறுவிதமாக இதனைக் கூறுகின்றன. அதாவது, "மழை, தீ, வெள்ளம், பூகம்பம், மின்னல், சிவில் பதட்டம், போர், கலவரம் அல்லது வேறு எந்த காரணத்தினால் லாக்கர் உள்ள வாடிக்கையாளர்களின் பொருட்களுக்கு சேதம் அல்லது இழப்பு ஏற்பட்டாலும், வங்கி அதற்கு பொறுப்பாகாது என்று கூறுகின்றன. ஆனால், ரிசர்வ் வங்கியும் இப்போது அதே போன்று அறிவித்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இத்தனைக்கும், பொருட்களை வங்கி லாக்கரில் வைப்பது ஒன்றும் இலவசம் கிடையாது. மெட்ரோ அல்லாத நகரங்களில் உள்ள சிறிய லாக்கர்களுக்கு ரூ.1,000 முதல் வருட கட்டணமாகவும், மெட்ரோ நகரங்களில் உள்ள பெரிய அளவிலான லாக்கர்களுக்கு ரூ.10,000 வரை வருட கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது.
இருப்பினும் வங்கிக்கும், லாக்கரில் பொருட்கள் வைப்பவர்களுக்கும் இடையேயான உறவு என்பது, 'குத்தகைக்கு விடுபவர் மற்றும் குத்தகைக்கு எடுப்பவர்' போன்றது என வங்கிகள் கூறுகின்றன.
ஆனால், இதனை வல்லுநர்கள் மறுக்கின்றனர். அவர்கள், வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையேயான உறவு என்பது, 'வீட்டு உரிமையாளர் - குடியிருப்போர்' போன்றது என கூறுகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரியின் அலட்சியத்தால் ஏற்படும் இழப்பை தவிர்த்து, கடவுளால் ஏற்படுத்தப்படும் எந்தவொரு நிகழ்வினாலும் உண்டாகும் இழப்பிற்கு வங்கிகள் பொறுப்பாகாது என்று தெரிவிக்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.