Advertisment

வங்கி பங்குகள் உயர்வு.. சென்செக்ஸ் 87 புள்ளிகள் சரிவு

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தை இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு செய்தன.

author-image
Jayakrishnan R
New Update
Stock Market Today 23 March 2023

பங்குச் சந்தை இன்றைய நிலவரம் மார்ச் 23 2022

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தை இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு செய்தன. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 87.12 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 36.25 புள்ளிகளும் சரிந்து வர்த்தகத்தை நிறைவு செய்தன.

Advertisment

இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையை பொருத்தமட்டில் ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்சிஎல் டெக், ஹெச்டிஎஃப்சி, இந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபம் பார்த்தன.

மறுபுறம் பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டிஸ் லேப், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தில் வணிகமாகின.

தேசிய பங்குச் சந்தையில், அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் நஷ்டத்தில் வணிகமாகின.

எனினும் அதானி எண்டர்பிரைசஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, எஸ்பிஐ, ஐசிசிஐசிஐ உள்ளிட்ட வங்கிப் பங்குகள் மற்றும் ஹெச்சிஎல் டெக், ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட நிறுவன பங்குகளும் லாபத்தில் வணிகத்தை நிறைவு செய்தன.

தற்போது மும்பை பங்குச் சந்தை 61,663.48 புள்ளிகளிலும், தேசியப் பங்குச் சந்தை 18,307.65 புள்ளிகளிலும் காணப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nse Nifty Sensex Bombay Stock Exchange
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment