நாளை (நவ.19) முதல் வங்கிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன.
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (ஏஐபிஇஏ) நவம்பர் 19ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் நாடு முழுவதும் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக, AIBEA பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம் கூறுகையில், சமீப காலமாக வங்கி, ஊழியர்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து காணப்படுவது மட்டுமின்றி, இந்த தாக்குதல்கள் அனைத்திலும் பொதுவான கண்ணோட்டம் உள்ளது” என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “இந்த தாக்குதல் பைத்தியக்காரத்தனத்தில் சில வழிமுறைகள் உள்ளன. எனவே, ஒட்டுமொத்தமாக வங்கி ஊழியர்களும் இந்தத் தாக்குதல்களை எதிர்க்க வேண்டும், பதிலடி கொடுக்க வேண்டும். இவை முறியடிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும் வெங்கடாசலம் கூறுகையில், “இருதரப்பு தீர்வு மற்றும் வங்கி அளவிலான தீர்வை மீறி 3,300க்கும் மேற்பட்ட எழுத்தர் ஊழியர்கள் ஒரு ஸ்டேஷனில் இருந்து மற்றொரு ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதுவும் பிரச்னைக்கு ஒரு காரணம்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil