Boarding Pass Secrets in tamil: உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் சிலர் தங்களுடைய போர்டிங் பாஸ்களை (Boarding Pass) சரியான முறையில் கையாளாமல் இருக்கின்றனர். இந்த சிறிய அலட்சியத்தால் அவர்கள் மிகப்பெரிய வகையில் பாதிப்பை சந்திக்கின்றனர். ஏன்னென்றால், அந்த போர்டிங் பாஸில் பயணம் செய்பவர் குறித்த அனைத்து தகவலும் இடம் பெற்று இருக்கும். குறிப்பாக அதிலுள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தால் போதும் மொத்த ஹிஸ்டரியும் கிடைத்து விடும்.
பொதுவாக போர்டிங் பாஸில், 1. பயணியின் பெயர், 2. செல்போன் நம்பர், 3. இ-மெயில் முகவரி( ஆன்லைன் புக்கிங்), 4. அனைத்து கனெக்டிங் விமானங்கள் பற்றிய தகவல்கள், 5. சீட் நம்பர், 6. ஃப்ரீக்வண்ட் ஃப்ளையர் நம்பர் (Frequent Flyer Number), 7. ஃப்ளைட் நம்பர், 8. போர்டிங் கேட் நம்பர் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்று இருக்கும். இது தவற நபர்கள் கையில் கிடைக்கும் பட்சத்தில் அவை தவறான முறையில் கையாளப்படும். எனவே, போர்டிங் பாஸ் குறித்து அதிக விழிப்பு நமக்கு எப்போதும்.
ஒருவேளை போர்டிங் பாஸை தவற விடும் பட்சத்தில் நாம் என்ன மாதிரியான பிரச்னைகளை எதிர்கொள்ளவோம்:
தவறான அல்லது ஹேக்கர்களுக்கு போர்டிங் பாஸ்கள் பல்வேறு தகவல்கள் அடங்கிய பொக்கிஷம். இதை எந்த காரணத்தை கொண்டும் நீங்கள் உங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் அல்லது இணைய பக்கங்களில் பகிரக்கூடாது என்பதில் கவனமாக இருக்கவும்.
போர்டிங் பாஸ்கள் மூலம் நமது பயண தேதிகளை ஒருவர் தெரிந்து கொள்ள முடியும். இந்த எளிய தகவலை கொண்டு தவறான அல்லது குற்ற செயல்களில் ஈடுபவர், உங்கள் வீட்டிற்கு நுழைந்து உங்களுடைய விலைமதிக்க முடியாத பொருட்களை கைப்பற்றி விடலாம். மேலும், உங்களது முழு பயண திட்டத்தையும் அவர்கள் தெரிந்து கொள்கிறார்கள்.
போர்டிங் பாஸ்களில் இடம்பிடித்திக்கும் உங்கள் சீட் நம்பர் அல்லது இருக்கை எண்ணை ஒருவர் தெரிந்து கொள்வதன் மூலம், அவர் உங்கள் இருக்கை எண்னை எளிதில் மற்ற முடிகிறது. அவர் அந்த விமான நிறுவனத்தை அணுகி உங்களைப்போல் பேசி எண்ணை மாற்ற வழிகள் உள்ளன. இவ்வாறு இருக்கை மாற்றுப்படுகையில் நீங்கள் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். இதேபோல், உங்கள் பயண தேதியையும் ஒருவர் எளிதில் மற்றக்கூடிய வழிகளும் உள்ளன.
போர்டிங் பாஸ்களில் உள்ள தகவலை ஒருவர் தெரிந்து கொள்வதன் மூலம், அவர் உங்களை பிளாக்மெயில் செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
போர்டிங் பாஸில் இருக்கும் 'ஃப்ரீக்வண்ட் ஃப்ளையர் நம்பர்' மூலமாகவும் ஹேக்கர்கள் உங்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 'ஃப்ரீக்வண்ட் ஃப்ளையர் நம்பர்' என்பது ஒரு எண் ஆகும். இது குறிப்பிட்ட விமான நிறுவனத்தின் விமானங்களில் தொடர்ச்சியாக பயணம் செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது.
'ஃப்ரீக்வண்ட் ஃப்ளையர் நம்பர்' திட்டத்தில் பதிவு செய்யக்கூடிய பயணிகளுக்கு விமான நிறுவனங்கள் இந்த எண்களை ஒதுக்கும். நீங்கள் தொடர்ச்சியாக பயணிக்கும்போது உங்களுக்கு 'பாயிண்ட்கள்' கிடைக்கும். இதை பிறகு, விமான பயணங்களுக்கோ அல்லது வெகுமதிகளை பெறுவதற்கோ நீங்கள் உங்கள் விருப்பப்படி 'ரீடீம்' (Redeem) செய்து கொள்ள முடியும்.
போர்டிங் பாஸில் உள்ள பார்கோடில் (Barcode) உங்கள் பிறந்த தேதி, பில்லிங் முகவரி போன்ற பல்வேறு தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அதை ஒருவர் ஸ்கேன் செய்வதன் மூலம் உங்கள் மொத்த தகவலையும் வழித்து எடுத்துவிடுவார்.
விமானங்களில் முதல்முறையாக பயணம் செய்யும் மக்களுக்கு போர்டிங் பாஸ் பற்றி அதிக தகவல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் முதல்முறை பயணம் செய்யும் குஷியில் போர்டிங் பாஸை முறையாக கையாள்வதில்லை. ஆதலால், அவர்கள் மேலே குறிப்பிட்டது போல் பல சிக்கல்களை சந்திக்கிறார்கள். எனவே, எப்போதாவது அல்லது அடிக்கடி விமான பயணம் செய்யும் மக்கள் போர்டிங் பாஸ்களை முறையாக கையாளுங்கள். அவற்றை சரியான முறையில் அழித்து விடங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.