BSNL: கொரோனா எதிரொலி: வீட்டிலிருந்து வேலை செய்வதை ஊக்குவிக்கும் விதமாக பிஎஸ்என்எல் தனது பிராட்பேண்ட் சேவையை ஒரு மாத காலம் இலவசமாக வழங்குகிறது.
கொரோனா வைரஸ் பரவுவதை தொடர்ந்து பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்கின்றன. இந்நிலையில், அரசு தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், பணியாளர்கள் வீட்டிலிருந்து பணி செய்வதை ஊக்குவிக்கும் விதமாக தனது தரைவழி மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு பிராட்பேண்ட் கட்டணத்தை ஒரு மாத காலத்திற்கு இலவசமாக அளிப்பதாக அறிவித்துள்ளது.
மருத்துவ காப்பீட்டு தொகையை கிளைம் செய்வது எப்படி?
Copper cable based இணைப்பை தேர்வு செய்யும் புதிய வாடிக்கையாளர்கள் installation கட்டணத்தை கூட செலுத்த வேண்டாம் ஆனால் அவர்கள் modem மட்டும் வாங்கி கொள்ள வேண்டும் என பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் தரைவழி இணைப்பு இருந்து ஆனால் எந்தவித பிராட்பேண்ட் சேவையும் இல்லாத நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஒரு மாத காலம் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே இந்த சேவையை பயன்படுத்தி அவர்கள் வீட்டில் இருந்து பணி புரியலாம் அல்லது வீட்டில் இருந்து பாடம் எடுக்கலாம் அல்லது வெளியில் செல்வதை குறைக்கும் விதமாக எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், என BSNL Director (CFA) Vivek Banzal ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டம் அனைத்து புதிய வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும், ஒரு மாத கால பயன்பாட்டிற்கு பிறகு அனைத்து வாடிக்கையாளர்களும் கட்டணம் செலுத்தும் திட்டத்துக்கு மாற்றப்படுவார்கள், என பிஎஸ்என்எல் அதிகாரிகள் தெரிவித்தனர். Optical Fibre Connectivity தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் installation கட்டணங்கள் பொருந்தும். பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இந்த இணைப்பை பெற தொலைபேசி மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்கான மொத்த செயல்முறையையும் காகிதமற்றதாக மாற்றியுள்ளோம் எனவே வாடிக்கையாளர்கள் பிராட்பேண்ட் இணைப்பை பெற வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு வரவேண்டிய தேவை இல்லை, என Vivek Banzal மேலும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”