ரூ. 39க்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தால் இப்படி ஒரு சலுகையை வழங்க முடியுமா?

அளவில்லாத வாய்ஸ் காலிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது

டெலிகாம்  நிறுவனத்தில் கடுமையான போட்டியை சந்தித்து வரும் பிஎஸ்என்எல் நிறுவனம், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ரூ. 39 ரீசார்ஜ் திட்டத்தில் புதிய ஆஃப்ர் ஒன்றை  அறிவித்துள்ளது.

டெலிகாம் சந்தையில் ஜியோவின் வருகைக்கு பின்பு, நிகழ்ந்த  மாற்றங்கள் ஏராளம். குறிப்பாக ஏர்டெல், வோடஃபோன், ஏர்செல்  போன்ற முன்னணி நிறுவனங்கள் பல, சந்தையில் தோல்வியை தழுவினர். ஏர்செல் நிறுவனம் தனது கடையை இழுத்து மூடியது.

இந்நிலையில், சந்தையில் உள்ள போட்டியை சமாளிக்க பிஎஸ்என்எல்  நிறுவனம்  வாடிக்கையாளர்களுக்கு புதிய புதிய ஆஃபர்களை அறிவித்தது. தனக்கென தனி வாடிக்கையாளர்களை வைத்துக் கொண்டு பிஎஸ்என்எல் நிறுவனம், ஜியோவுடன் கடுமையாக போட்டிப்போட்டுக் கொண்டு வருகிறது.

இதன் பயனாக வாடிக்கையாளர்கள் மத்தியில், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு  நல்ல வரவேற்பு கிடைத்தது.  இந்த போட்டியில் ஜியோவை மிஞ்சும் அளவிற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் அடுத்தடுத்த ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்தது. ஏர்செல்லின் வீழ்ச்சிக்கு பின்பு, சுமார் 15 லட்சம் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் பக்கம் சென்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ரூ. 39  ரீசார்ஜ் திட்டத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம்   அளவில்லாத வாய்ஸ் காலிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 10 நாட்கள்  செயல்படும் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் அளவில்லாத  வாய்ஸ் காலிங் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். கூடவே, 100 இலவச எஸ் எம் எஸ்க்களை பயன்படுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் ரூ. 39 க்கு ரீசார்ஜ் செய்துக் கொண்டு வாடிக்கையாளர்கள் அளவில்லாத வாய்ஸ் காலிங் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்நிறுவனம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

×Close
×Close