Advertisment

வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைவு

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.157. 50 காசுகள் குறைந்து 1,695 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Puducherry govt release GO, Puducherry news, latest Puducherry news, புதுச்சேரியில் சமையல் கேஸ் சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம், புதுச்சேரியில் சமையல் கேஸ் சிலிண்டருக்கு மாதம் ரூ.150 மானியம், புதுச்சேரி அரசாணை வெளியீடு, Puducherry, Puducherry GO Rs 300 and Rs 150 subsidy per mont for gas cylinder

Commercial Gas Cylinder Price Lpg Price September 2023

சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது நிர்ணயித்து வருகின்றன.

Advertisment

ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அந்த வகையில் செப்டம்பர் 1 ஆம் தேதியான இன்று வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.157. 50 காசுகள் குறைந்துள்ளது.

அதன்படி 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர்  ரூ.1,852.50-இல் இருந்து குறைந்து, 1,695 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளன.

ஏற்கனவே மத்திய அரசு வீட்டு உபயோக சிலிண்டருக்கான விலையை ரூ.200 குறைத்து அறிவித்த நிலையில் தற்போது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையும் குறைந்துள்ளது.

வீட்டு உபயோகத்துகான கேஸ் சிலிண்டர் விலை 918.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Business
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment