1-3 ஆண்டுகள் எஃப்.டி; கனரா வங்கி வட்டி விகிதம் என்ன?
ஃபிக்ஸட் டெபாசிட் பாதுகாப்பான முதலீடாகவும், குறிப்பிட்ட வட்டியை உத்தரவாதத்துடன் திருப்பி அளிக்க கூடியதாகவும் உள்ளது. மூத்தக் குடிமக்களுக்கு சிறப்பு திட்டங்கள் உள்ளன.
ஃபிக்ஸட் டெபாசிட் பாதுகாப்பான முதலீடாகவும், குறிப்பிட்ட வட்டியை உத்தரவாதத்துடன் திருப்பி அளிக்க கூடியதாகவும் உள்ளது. மூத்தக் குடிமக்களுக்கு சிறப்பு திட்டங்கள் உள்ளன.
1-3 ஆண்டுகள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00
ஃபிக்ஸட் டெபாசிட் (FD) என்பது ஒரு நிலையான வட்டி விகிதத்தில் ஒரு நிலையான காலப்பகுதியில் மொத்தமாக முதலீடு செய்யக் கூடிய ஒரு திட்டமாகும். மேலும், ஃபிக்ஸட் டெபாசிட் பாதுகாப்பான முதலீடாகவும், குறிப்பிட்ட வட்டியை உத்தரவாதத்துடன் திருப்பி அளிக்க கூடியதாகவும் உள்ளது. இதுமட்டுமின்றி, மூத்தக் குடிமக்களுக்கு சிறப்பு திட்டங்கள் உள்ளன. மேலும், பங்குச் சந்தை தொடர்பான அபாயங்களும் இல்லை.
Advertisment
இதனால் அனைத்து வயது தரப்பினரும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அந்த வகையில் 1-3 ஆண்டுகள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.
வங்கி பெயர்
உயர் வட்டி (%)
எஃப்.டி காலம்
1-3 ஆண்டுகள் (%)
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
7.25%
399 நாள்கள்
6.75%-7.25%
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
7.10%
400 நாள்கள் (அம்ரித கலாஷ்)
6.80%-7.00%
பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி
7.40%
444 நாள்கள்
6.20%-7.25%
பஞ்சாப் நேஷனல் வங்கி
7.25%
400 நாள்கள்
6.75%-7.25%
இந்தியன் வங்கி
7.25%
400 நாள்கள் (IND சூப்பர்)
6.10%-7.25%
கனரா வங்கி
7.25%
444 நாள்கள்
6.85%-7.25%
பேங்க் ஆஃப் இந்தியா
7.25%
2 ஆண்டுகள்
6.80%-7.25%
ஆர்.பி.எல் வங்கி
8.10%
18 மாதங்கள் -2 ஆண்டுகள்
7.50%-8.10%
கோடக் மகிந்திரா வங்கி
7.40%
390 நாள்கள்- முதல் 23 மாதத்துக்குள்
6.50%-7.40%
இந்தஸ்இந்த் வங்கி
7.65%
1 ஆண்டு முதல் 2 ஆண்டு
7.00%-7.65%
ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸட் வங்கி
8.00%
500 நாள்கள்
6.50%-8.00%
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
7.2%
15 மாதங்கள்-2 ஆண்டுகள்
-
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
7.25%
18 மாதங்கள்-21 மாதத்துக்குள்
6.60%-7.25%
ஃபெடரல் வங்கி
7.50%
500 நாள்கள்
6.80%-7.50%
டி.சி.பி. வங்கி
8.00%
25 மாதங்கள்-26 மாதங்கள்
7.15%-8.00%
பந்தன் வங்கி
7.85%
500 நாள்கள்
7.45%-7.85%
ஆக்ஸிஸ் வங்கி
7.20%
17-18 மாதங்கள்
6.70%-7.20%
எஸ்.பி.ஐ க்ரின் ரூபி டெபாசிட்
Advertisment
Advertisements
எஸ்.பி.ஐ பசுமை ரூபாய் கால வைப்புத் திட்டம் குடியுரிமை பெற்ற தனிநபர்கள், தனிநபர்கள் அல்லாதவர்கள் மற்றும் என்.ஆர்.ஐ வாடிக்கையாளர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி வலைத்தளத்தின்படி, எஸ்.பி.ஐ க்ரின் ரூபி டெபாசிட் (SGRTD) ஆனது அந்தந்த காலத்திற்கான சில்லறை மற்றும் மொத்த வைப்புத்தொகைக்கான கார்டு விகிதத்திற்குக் கீழே 10 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) வட்டி விகிதங்களை வழங்கிறது.
அந்த வகையில் சில்லறை டெபாசிட் மற்றும் மொத்த டெபாசிட் வட்டி விகிதங்களை பார்க்கலாம்.
ரீடெயில் டெபாசிட் காலம்
வட்டி
1111 நாள்கள்
6.65 சதவீதம்
1777 நாள்கள்
6.65 சதவீதம்
2222 நாள்கள்
6.40 சதவீதம்
மொத்த டெபாசிட் வட்டி விகிதங்கள்
மொத்த டெபாசிட் காலம்
வட்டி
1111 நாள்கள்
6.15 சதவீதம்
1777 நாள்கள்
6.15 சதவீதம்
2222 நாள்கள்
5.90 சதவீதம்
இந்தத் திட்டத்தில் முதிர்ச்சிக்கு முன் பணத்தை திரும்ப பெறவும் அனுமதிக்கபபடுகிறது.
கிரீன் டெபாசிட் என்பது, ரிசர்வ் வங்கியின் ஏப்ரல் 11, 2023 தேதியிட்ட அறிவிப்பின்படி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களால் (RE) பெறப்பட்ட வட்டி-தாங்கி வைப்புத்தொகையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“