covid 19 insurance policy crona insurance : சென்னைக்கு மட்டுமில்லை ஒட்டுமொத்த இந்தியாவிற்கே இந்த நிலைமை வரும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்த உலகம் இதுப்போன்ற எத்தனையோ வைரஸ் தாக்குதலை எதிர்க் கொண்டிருந்தாலும் மரண பயத்தை நம் கண் முன்னே கொண்டு வந்து இருக்கிறது ’கோவிட் 19’ என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தாக்குதல்.
ஆரம்பத்தில் கொரோனா, கடல் தாண்டிய சீனாவில் தானே பரவி வருகிறது என அசால்ட்டாக இருந்தோம். கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவிற்குள் நுழைந்து கடைசியில் தமிழகத்தில் காலடி எடுத்து வைத்தது. பின்பு சென்னையை ஆடிப்படைத்தது. இப்போது 4 மாதத்திற்குள் பக்கத்து வீடு எதிர் வீடு என திரும்பிய பக்கம் எல்லாம் கொரோனா நோயாளிகள் தான். இது பரவும் வேகத்தைக் கணிக்கவே முடியாததாக உள்ளது.
அதுமட்டுமில்லை, நோய்தொற்று உறுதியாகி இன்று மருத்துவமனை செல்பவர்கள் மறுநாளே இறப்பது கொடுமையிலும் கொடுமை. கண்ணுக்கு தெரியாத வைரசால் கொத்து கொத்தாக மக்கள் இறப்பதை கேட்டபதற்கும், பார்ப்பதற்குமே தனி தைரியம் தேவைப்படுகிறது.
இந்த நிலையில் தான் சில தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், கொரோனாவுக்கான சிகிச்சைக்கென பிரத்யேக பாலிசிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த பாலிசிகளுக்கான பிரீமியம் தொகை குறைவாக இருப்பதால், இந்த பாலிசிகளை வாங்கினால் பாதுகாப்பாக இருக்கலாம் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் அதிகம் உள்ளது. இதில் எந்தவித தவறும் இருப்பதாக தெரியவில்லை. காரணம், குறைந்த பிரீமியம் கட்டணம் மூலம் நமக்கும் நமது குடும்பத்தாருக்கும் எதோ ஒரு வகையில் பண உதவி கிடைப்பது சிறிதே நம்பிக்கை பெருமூச்சை விட செய்கிறது.
கொரோனா பாலிசிகள்:
1. ஸ்டார் ஹெல்த் & அலையன்ஸ் இன்ஷுரன்ஸ் ’கோவிட் 19’பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளன.
2. பார்தி ஆக்ஸா பாலிசியானது ஏர்டெல் பேமன்ட் நிறுவனத்தோடு இணைந்து கோவிட் 19 பாலிசியை புழகத்திற்கு கொண்டு வந்துள்ளது. இதனை ஏர்டெல் பேமன்ட் பேங்கிங் பயன்பாட்டாளர்கள் மட்டுமே எடுக்க முடியும்.
3.ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி லொம்பார்ட் பாலிசியை ட்ரூ பேலன்ஸ் எனும் மொபைல் ரீசார்ஜ் ப்ளாட்ஃபார்மோடு இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது.
4. ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷுரன்ஸ் நிறுவனம், யெஸ் பேங்கோடு இணைந்து கோவிட்19 பாலிசியை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வந்துள்ளது.
பாலிசி குறித்த பயம் வேண்டாம்:
கொரோனாவுக்கான சிறப்பு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் அனைத்துமே ஐ.ஆர்.டி.ஏ.ஐ ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டது தான். ஒவ்வொரு பாலிசியின் பிரீமியம் மற்றும் க்ளெய்ம் பெறுவதற்கான விதிமுறைகளில் மாற்றம் இருக்கிறது. இதனை வாடிக்கையாளர்கள் முன்பே நன்கு விசாரித்த பின்னரே பாலிசியை தொடங்க வேண்டும்.
அதே போல், ஐ.ஆர்.டி.ஏ.ஐ ஒழுங்குமுறை விதிமுறைப்படி, பொதுவான ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியிலேயே கொரோனா சிகிச்சைக்கான செலவுக்கும் க்ளெய்ம் செய்யலாம். இதனால் ஏற்கனவே, ஹெல்த் பாலிசி எடுத்திருப்பவர்கள் கொரோனாவுக்காக சிறப்பு பாலிசிகளை எடுக்க வேண்டிய கட்டாயமே இல்லை. அதே நேரம், ஏற்கனவே ஆரம்பித்த பாலிசி டேட் முடிந்தவர்கள் இதற்கு மேல் க்ளெய் செய்ய முடியாத நிலையில் இருந்தால் மட்டும் இந்த புதிய கோவிட் 19 பாலிசிகளை தொடங்கலாம். இன்று வரை தனக்காகவும், தனது குடும்பத்தாருக்காவும் எந்தவித பாலிசிகளை எடுக்காதவர்கள் இன்றாவது இதில் ஏதாவது ஒரு பாலிசியை ஆரம்பியுங்கள். கண்டிப்பாக பயன் தரும். இதுவும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான்.
சிறப்பு பாலிசி புதிதல்ல:
இதுப்போன்ற கோவிட் 19 பாலிசி மக்களுக்கு புதிய அறிமுகம் இல்லை. ஏற்கனவே, தமிழகத்தில் இதுப் டெங்கு காய்ச்சல் பரவல் மற்றும் இறப்புகள் அதிகமான போது எல்.ஐ.சி உட்பட பல்வேறு பாலிசி நிறுவனங்கள் டெங்குக்காகவே சிறப்பு பாலிசி கொண்டுவந்துள்ளனர்.
ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷுரன்ஸ் மற்றும் யெஸ் பேங்க் பாலிசியைப் பொறுத்தவரை, 15 நாள்களுக்கு கோவிட்-19 சிகிச்சை மற்றும் வேலை இழப்பு கவர் செய்யக்கூடியது. இது யெஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கான பிரத்யேக பாலிசியாகும். கோவிட் -19 ரிலையன்ஸ் பொது காப்பீடு
இந்த காப்பீட்டு தனிமைப்படுத்தல் காலம் (quarantine period) மற்றும் கோவிட் -19 நோய் பரிசோதனை ஆகிய இரண்டிற்கும் பாதுகாப்பு வழங்குகிறது.
பணம் இல்லாமல் தடைபடும் திருமணங்கள்...கைகொடுக்கும் பிரபல வங்கி!
ஒரு பாலிசிதாரர் கோவிட்-19 பரிசோதனையில் நோய் உறுதி செய்யப்பட்டால், சிகிச்சை செலவைப் பொருட்படுத்தாமல், அவருக்கு அடிப்படை பாதுகாப்பு 100 சதவிகிதம் காப்பீட்டுத் தொகையில் வழங்கப்படும்.
மூன்று மாதம் முதல் 60 வயது வரையுள்ள அனைத்து தனிநபர்களும் இந்த பாலிசியில் சேரலாம். ஒரு லட்சம் வரை காப்பீடு செய்யப்படும். இதில் டி,சி என இரண்டு வகையான பாலிசிகள் உள்ளன. வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு தகுந்தது போல் தேவையான பாலிசிகளை தேர்வு செய்துக் கொள்ளலாம். வெறும் ஒரு வருடத்திற்கு மட்டுமே இந்த பாலிசி கவர் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.