cyclone nivar tamil chennai : சென்னையில் இந்த மாதத் தொடக்கம் முதலே காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக வெங்காயத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. நேற்றைப் போலவே இன்றும் ஒரு சில காய்கறிகளின் விலை உயர்ந்தும் ஒரு சில காய்கறிகளின் விலையும் குறைந்தும் காணப்படுகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை 35 ரூபாயாக உள்ளது. நேற்றும் இதே விலைக்குத்தான் விற்பனை செய்யப்பட்டது.
பச்சை மிளகாய் விலை நேற்று 30 ரூபாயிலிருந்து இன்று 35 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பீட்ரூட் விலை 40 ரூபாயாகவே உள்ளது. அவரைக்காய் விலை 60 ரூபாயாகவும், கத்தரிக்காய் விலை 25 ரூபாயாகவும் உள்ளது.
காய்கறிகளின் விலைப் பட்டியல்:
தக்காளி – ரூ.35
அவரைக்காய் – ரூ.60
பீன்ஸ் – ரூ.40
பீட்ரூட் – ரூ.40
பாகற்காய் – ரூ.35
கத்தரிக்காய் – ரூ.25
முட்டைகோஸ் – ரூ.23
குடை மிளகாய் – ரூ.35
கேரட் – ரூ.75
காளிபிளவர் – ரூ.35
சவுசவு – ரூ.12
தேங்காய் – ரூ.37
வெள்ளரிக்காய் – ரூ.10
முருங்கைக்காய் – ரூ.55
இஞ்சி – ரூ.100
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”