Diwali Muhurat Trading 2022: இந்திய பங்குச் சந்தைகளான மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) மற்றும் தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) தீபாவளி, லக்ஷ்மி பூஜையை முன்னிட்டு வருகிற திங்கள்கிழமை (அக்டோபர் 24) விடுமுறை ஆகும்.
இருப்பினும், முகூர்த்த வர்த்தகத்திற்காக இரண்டு பரிமாற்றங்களும் அன்று ஒரு மணி நேரம் திறந்திருக்கும். அப்போது, ஒரு மணி நேரம் பங்குச் சந்தை வர்த்தகம் நடைபெறும்.
இது 50 ஆண்டுகால பாரம்பரியம், இது வர்த்தக சமூகத்தால் இன்று வரை தக்கவைக்கப்படுகிறது. இந்து நாட்காட்டியின்படி தீபாவளி புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
ஆகையால், இந்த நாளில் நடைபெறும் முகூர்த்த வர்த்தகம் ஆண்டு முழுவதும் செல்வத்தையும் செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது.
அதன்படி, ஈக்விட்டி மற்றும் டெரிவேடிவ்ஸ் பிரிவில் வர்த்தகம் மாலை 6:15 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இரவு 7:15 மணிக்கு நிறைவடையும்.
ப்ரீ-ஓபன் அமர்வு மாலை 6:00 மணிக்கு தொடங்கி மாலை 6:08 மணிக்கு நிறைவடையும். அதேபோல், மூலதனச் சந்தைப் பிரிவிற்கு, பிளாக் டீல் அமர்வு நேரங்கள் மாலை 5:45 முதல் மாலை 6:00 மணி வரை.
ப்ரீ-ஓபன் அமர்வு மாலை 6 மணிக்குத் தொடங்கி மாலை 6:08 மணி வரையிலும் சந்தை திறந்திருக்கும். எனவே, தீபாவளி திருநாளில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்தத் தேதியை மறந்துவிடாதீர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“