படிப்படியாக செல்வத்தை உருவாக்குது ஆரம்பத்தில் ஒரு பெரிய சவாலான பணியாகத் தோன்றலாம். ஆனால் நாளடைவில் ஒரு கார்பஸை உருவாக்க இது ஒரு பயனுள்ள உத்தியாகும்.
குறிப்பாக ஒரே நேரத்தில் முதலீடு செய்ய உங்களிடம் பெரிய தொகை இல்லை என்றால் இதனைப் பயன்படுத்தலாம்.
குறைந்தப்பட்ச முதலீடு
கணிசமான ஆரம்பத் தொகையைக் கோரும் பல முதலீட்டு வழிகளைப் போலல்லாமல், ஆர்.டி. முதலீடு கவர்ச்சிக்கரமானவை. முதலீட்டாளர்கள் ஒப்பீட்டளல் குறைந்த தொகையுடன் RD கணக்கைத் தொடங்கலாம்.
அந்த வகையில், வங்கிகள் வழங்கும் RD வட்டி விகிதங்கள் தொடர்பாக பார்க்கலாம்.
பொதுத்துறை வங்கிகள்
பேங்க் ஆஃப் பரோடா 6.50 சதவீதம், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 5.75 சதவீதம், கனரா வங்கி 6.70 சதவீதம், சென்டிரல் பேங்க் ஆஃப் இந்தியா 6.25 சதவீதம், இந்தியன் வங்கி 6.25 சதவீதம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 6.50 சதவீதம், பஞ்சாப் நேஷனல் வங்கி 6.50 சதவீதம், பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி 6.25 சதவீதம், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 6.50 சதவீதம், யூகோ வங்கி 6.20 சதவீதம், யூனியன் வங்கி 6.70 சதவீதம் வட்டி வழங்குகின்றன.
தனியார் வங்கிகள்
ஆக்ஸிஸ் வங்கி 7 சதவீதம், பந்தன் வங்கி 5.85 சதவீதம், கதோலிக் வங்கி 5.75 சதவீதம், சிட்டி யூனியன் வங்கி 6.25 சதவீதம், டிசிபி வங்கி 7.75 சதவீதம், பெடரல் வங்கி 6.60 சதவீதம், ஹெச்டிஎஃப்சி வங்கி 7 சதவீதம், ஐசிஐசிஐ வங்கி 7 சதவீதம், ஐடிபிஐ வங்கி 7 சதவீதம், ஐடிஎஃப்சி ஃபர்ஸட் வங்கி 7 சதவீதம், இண்டஸ்இந்த் வங்கி 7.25 சதவீதம், ஜே அண்ட் கே வங்கி 6.50 சதவீதம், கர்நாடகா வங்கி 6.20 சதவீதம், கோடாக் வங்கி 6.20 சதவீதம், கரூர் வைஸ்யா வங்கி 6.25 சதவீதம், ஆர்பிஎல் வங்கி 6.25 சதவீதம், சௌத் இந்தியா வங்கி 6 சதவீதம், யெஸ் வங்கி 7 சதவீதம் வட்டி வழங்குகின்றன.
ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள்
ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 7 சதவீதம், ஈகுடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 7.25 சதவீதம், சூர்யோடே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 9.10 சதவீதம், உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 7.20 சதவீதம் வட்டி வழங்குகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“