scorecardresearch

EPFO NEWS: அதிக பென்ஷன் விருப்பமா? தேர்வு செய்ய கடைசி தேதி அறிவிப்பு

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் (EPFO) கீழ் ஓய்வூதியம் பெறும் பழைய ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் (EPFO) கீழ் ஓய்வூதியம் பெறும் பழைய உறுப்பினர்களில் ஒரு பிரிவினர் அதிக ஓய்வூதியத்தைத் தேர்வு செய்வதற்கான கடைசி தேதியை மே 3-ம் தேதி வரை நீட்டிகப்பட்டுள்ளது.

Provident Fund interest rate likely to remain at around 8 this fiscal
EPFO இன் உச்ச முடிவெடுக்கும் அமைப்பான CBT, கடைசியாக அக்டோபர் 31, 2022 அன்று கூடியது.

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (The Employees’ Provident Fund Organisation (EPFO)) இன்று (திங்கள்கிழமை)
அதிக ஓய்வூதியத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான கடைசி தேதியை மே 3-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. “செப்டம்பர் 1, 2014-க்கு முன்னர் சேவையில் இருந்த மற்றும் 01.09.2014 அல்லது அதற்குப் பிறகு தொடர்ந்து சேவையில் இருந்த ஊழியர்களுக்கான கூட்டு விருப்பமானது, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுப்பதற்கான கடைசி தேதியை நீட்டித்துள்ளது என்று EPFO ​​தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. இருப்பினும், இதற்கான லிங்க் முழுமையாக செயல்படவில்லை.

பிப்ரவரி 20 அன்று EPFO ​​அதன் மண்டல அலுவலகங்களுக்கு ஒரு தொகுப்பை வெளியிட்ட பிறகு, அதன் பழைய உறுப்பினர்களில் ஒரு பிரிவினர் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் அதிக ஓய்வூதியத்தைத் தேர்வுசெய்ய அனுமதித்தது.

நவம்பர் 4 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ஊழியர்களின் ஓய்வூதிய (திருத்தம்) திட்டம், 2014 இல் திருத்தங்களை உறுதிசெய்தது. செப்டம்பர் 1, 2014 முன்பு இபிஎஸ் உறுப்பினர்களாக உள்ள ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் பங்களிப்பை வழங்குகிறது. சம்பளத்தில் இருந்து 8.33 சதவீதம் அதாவது மாதம் ரூ. 15,000 – ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பில் EPS சந்தாதாரர்களுக்கு அதிக ஓய்வூதியத்தைத் தேர்வுசெய்ய நான்கு மாத கால அவகாசத்தை அனுமதித்தது, அதன் காலக்கெடு தற்போது மார்ச் 3, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Epfo extends deadline to opt for higher pension