FASTag Sticker ICICI, HDFC, Axis, SBI : FASTag என்பது ப்ரீபெய்டு முறையிலான ரீசார்ஜ் செய்துகொள்ளத்தக்க அட்டை ஆகும். இந்திய டோல்கேட்களில், எலெக்ட்ரானிக் அடிப்படையிலான டோல் கட்டணத்தை செலுத்தும் பொருட்டு, நேசனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா, FASTag முறையினை அறிமுகப்படுத்தியது.
எந்த வங்கிகள் ஃபாஸ்டேக்கை வழங்குகின்றன?
NETC திட்டத்தின் (npci.org.in/netc-live-members) கீழ் சான்றளிக்கப்பட்ட 23 வங்கிகளில் ஏதேனும் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கிளைகளில் FASTag ஐ வாங்கலாம். எச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, யெஸ் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்.பி.ஐ) மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (பி.என்.பி) ஆகியவை சில முக்கிய வங்கிகளில் அடங்கும்.
December 1 முதல் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் (FASTag) கட்டாயம் !!
வங்கிகளிடமிருந்து ஒரு ஃபாஸ்டேக்கை நீங்கள் எவ்வாறு வாங்கலாம் என்பது இங்கே:
எச்.டி.எஃப்.சி வங்கி : எச்.டி.எஃப்.சி வங்கி FASTag ஐ வாடிக்கையாளர்களை தனது இணையமுகவரியில் வாங்க அனுமதிக்கிறது. அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் வங்கியின் பிரத்யேக FASTag பக்கத்தில் உள்நுழைந்து பதிவு எண், உரிமையாளர் பெயர், வாகன வகுப்பு உள்ளிட்ட தங்கள் வாகனத்தின் விவரங்களை நிரப்ப வேண்டும்.
இந்த நடவடிக்கைக்குப் பிறகு, முக்கிய ஆவணங்களின் நகலைப் பதிவேற்ற வேண்டும். ஆன்லைனில் கட்டணம் செலுத்திய பிறகு, FASTag அட்டை வாடிக்கையாளரின் வீட்டு வாசலுக்கு வந்து வழங்கப்படும்.
ஐசிஐசிஐ வங்கி : நாட்டின் மற்றொரு பெரிய தனியார் துறை வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் FASTag என்ற பிரத்தியோக இணைய பக்கத்தை உருவாக்கியிருக்கிறது. 'அப்பளை நவ்' என்பதைக் கிளிக் செய்தால், கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் கொடுத்து விட வேண்டும். அதன்பிறகு புதிய FASTag அட்டையை வாடிக்கையாளர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா: நாட்டின் மிகப்பெரிய பொதுதுறை வங்கியான FASTag க்கு விண்ணப்பம் செய்வதற்காக தனியாக ஆன்லைன் போர்டல் எதையும் உருவாக்க வில்லை . இருப்பினும், எஸ்பிஐ வலைத்தளத்தில் கஸ்டமர் கேர் நம்பர் 1800-11-0018 இடம்பெற்றிருகிறது. FASTag வாங்கநினைக்கும் பயனர்கள் , இந்த நம்பரை அழைத்தால் FASTag விற்கப்படும் பாயிண்ட்-ஆப்- சேல் செல்வதைப் பற்றிய முழு தகவல்களும் தெரிவிக்கப்படும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி : நாட்டின் சிறந்த பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பி.என்.பி., அதன் வலைத்தளத்திலிருந்து வாடிக்கையாளர்கள் FASTag அட்டைக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கிறது. அந்த போர்டலுக்கு பயனர்கள் தங்களது முழு விவரங்களையும் சமர்பித்து, கட்டணம் கட்டிய பிறகு FASTag அட்டையை பெறலாம்.
FASTag அட்டையை, நமது வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் பொருத்த வேண்டும். டோல்கேட்டை, நமது வாகனம் கடந்து செல்லும்போது, ரேடியோ அலைவரிசை அடிப்படையிலான FASTag, மூலம், அதற்குரிய கட்டணம், நாம் இணைத்துள்ள வங்கிக்கணக்கின் மூலமாகவோ, அல்லது ப்ரீபெய்டு ரீசார்ஜ் மூலமான கட்டணத்தின் கழியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.